Tag: அரிய வகை நோய் மருந்துகளுக்கு இறக்குமதி வரிவிலக்கு

தினசரி தேசிய நிகழ்வுகள்

இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்க்ரா தேயிலைக்கு ஐரோப்பிய விவசாய சங்கம்  சார்பில் ஐரோப்பிய புவியியல் குறியீட்டை  (GI) வழங்கியுள்ளது . இது தேயிலை ஒரு குறிப்பிட்ட பகுதியில் விளையும் பொருட்களை   அங்கீகரிக்கும் முக்கியமான சான்றிதழாகும். பொதுவாக இது அதன் தோற்ற இடத்தின் அடிப்படையில், பெயர் தரம் மற்றும் தனித்துவத்தின் உத்தரவாதத்தை வழங்குகிறது. இந்தியாவில், காங்க்ரா தேநீர் 2005 இல் புவியியல் குறியீட்டிற்கான  அங்கீகாரத்தைப்   பெற்றது. அரிய வகை நோய் மருந்துகளுக்கு இறக்குமதி வரிவிலக்கு அரிய நோய்களுக்கான தேசியக் கொள்கை, 2021ன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து வகை  அரிய நோய்களுக்கும் சிகிச்சைக்கான   சுங்க வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. இந்த விலக்கு ஏப்ரல் 2023 முதல் அமலுக்கு வரும். மருந்துகளுக்கு பொதுவாக 10% அடிப்படை சுங்க வரி விதிக்கப்பட்டு வருகிறது , அதே சமயம் சில வகை உயிர்காக்கும் மருந்துகள்/தடுப்பூசிகள் 5%  இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது அரிதான நோய்களுக்கான தேசியக் கொள்கை, 2021: ஒருங்கிணைந்த மற்றும் விரிவான தடுப்பு மூலோபாயத்தின் அடிப்படையில் அரிதான நோய்களின்  பரவலைக் குறைப்பதை இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. அரிதான நோய்களுக்கான தேசியக் கொள்கை, 2021, அரிதான நோய்களுக்கான சிகிச்சை முறைகள் பற்றிய  ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் அரிய நோய்களுக்கான சிகிச்சை முறைகளை உள்நாட்டில் உருவாக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான ஆணையை வழங்குகிறது.