ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா இவர் 1857 அக்டோபர் 4 அன்று மாண்டவியில் பிறந்தார். இவர் இந்தியப் புரட்சியாளர், வழக்கறிஞர் மற்றும் பத்திரிகையாளர்ஆவார். புரட்சிகர தேசியவாதத்தை ஊக்குவிப்பதற்காக இந்திய தன்னாட்சி சங்கம் (Indian Home Rule Society) 1905 ஆம் ஆண்டு லண்டனில் ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மாவால் நிறுவப்பட்டது. ஜூலை 1905 லண்டனில் 'இந்தியா ஹவுஸ்' (India House) அமைப்பை நிறுவி, 'தி இந்தியன் சோஷியாலஜிஸ்ட்' (The Indian Sociologist) என்ற இதழைத் தொடங்கினார். இது பிரிட்டனில் இந்திய தேசியவாத செயல்பாடுகளின் மையமாகத் திகழ்ந்தது. பம்பாய் ஆரிய சமாஜத்தின் முதல் தலைவராகப் பணியாற்றினார் மற்றும் விநாயக் தாமோதர் சாவர்க்கருக்கு (வீர சாவர்க்கர்) ஊக்கமளித்தவர்களில் ஒருவராக இருந்தார். முதலாம் உலகப் போரின் போது பாரிஸிற்கும், பின்னர் ஜெனீவாவிற்கும் குடிபெயர்ந்தார். மார்ச் 30, 1930 இல் அவர் காலமாகும் வரை அங்கேயே தங்கியிருந்தார். இவரது நினைவாக 'கிராந்தி தீர்த்' (Kranti Teerth) என்ற நினைவகம் 2010 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது.

