பிரசார் பாரதியில் புதிய தலைமை சூழல்: தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், இந்தியாவின் பொது சேவை ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் தலைவராக பிரபல பாடலாசிரியர், எழுத்தாளர் மற்றும் தகவல் தொடர்பு நிபுணர் பிரசூன் ஜோஷியை நியமித்துள்ளது. பிரசார் பாரதி பற்றி பிரசார் பாரதி என்பது நாட்டின் பொது சேவை ஒளிபரப்பு நிறுவனமாகும். இது 1997 ஆம் ஆண்டில் பிரசார் பாரதி சட்டத்தின் கீழ் ஒரு தன்னாட்சி பெற்ற சட்டப்பூர்வ அமைப்பாக நிறுவப்பட்டது. பொதுமக்களுக்கு கல்வி, தகவல் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை வழங்கும் ஒளிபரப்பு சேவைகளை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்த நிறுவனத்தில் தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி ஆகிய இரண்டும் அடங்கும். இவை முன்பு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் இயக்கப்பட்டு வந்தன. பிரசார் பாரதியின் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது. நடப்பு தகவல்கள் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) டெல்லி, நோயாளியின் படுக்கையிலேயே பயன்படுத்தக்கூடிய நாட்டின் முதல் கையடக்க (போர்ட்டபிள்) MRI முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் நடத்தை விதிகள் (MCC) என்பது தேர்தலின் போது அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் நடத்தையை ஒழுங்குபடுத்துவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின் கட்டமைப்பாகும். பிரச்சாரம், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை ஆகியவை நியாயமான, சுமூகமான மற்றும் வெளிப்படையான முறையில் நடைபெறுவதை உறுதி செய்தல். ஆளுங்கட்சி தனது தேர்தல் ஆதாயத்திற்காக அரசு வளங்கள் மற்றும் பொது நிதியை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்தல். தேர்தல் முறைகேடுகள், குற்றங்கள் மற்றும் ஊழல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துதல், மற்றும் தேர்தல்கள் நேர்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்தல். தேர்தலின் போது அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களை வழிநடத்தும் தேர்தல் நடத்தை விதிகள் (MCC) முதன்முதலில் 1960-ல் கேரள அரசால் உருவாக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் (EC) இதை 1968-ல் முறைப்படுத்தியது, 1974-ல் திருத்தியது மற்றும் 1979-ல் “ஆளுங்கட்சி” (Party in Power) பற்றிய ஏழாவது பகுதியை (Part VII) சேர்த்தது. முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் 1991 முதல் இதை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கண்டிப்புடன் அமல்படுத்தினார். திருக்குறள் உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து. பொருள்: உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணி போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர். அவர்களுடைய உருவின் சிறுமையைக் கண்டு இகழக் கூடாது.(எண் 667) அதிகாரம்: வினைத்திட்பம் தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும் வழிமுறைகள் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில், ஆட்சி அமைக்கக் குறைந்தபட்சம் 118 இடங்கள் தேவை. எந்தவொரு கட்சிக்கும் 118 இடங்கள் கிடைக்காத நிலை, 'தொங்கு சட்டமன்றம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 163 மற்றும் 164-வது பி சரத்துகளின்படி, ஆளுநர் பின்வரும் 4 வழிகளில் ஒரு கட்சியை ஆட்சியமைக்க அழைக்கலாம்: தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைத்து வெற்றி பெற்றவர்கள். தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றிய…

