நிதி ஆயாக் நிர்வாக குழு கூட்டம். தில்லியில் நடைபெற்ற நீதி ஆயோக் (கொள்கை வகுக்கும் குழு) அமைப்பின் நிர்வாகக் குழு கூட்டத்தில் பிரதமர் மோடி. “வளர்ந்த பாரதம் 2047: இந்தியர்களின் பங்களிப்பு” என்ற கருத்துருவில் நீதி ஆயோக்கின் 8-வது நிர்வாகக் குழு கூட்டம், 2023 மே 23 நடைபெற்றது. நிதி ஆயோக் என்பது நாட்டின் மிக உயரிய கொள்கை உத்திகளை வகுக்கும் அமைப்பாகும். பிரதமர் தலைமையிலான இதன் நிர்வாகக் குழுவின் அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். சாதனை “அமிருத சரோவர்” திட்டத்தின் கீழ் 50,000-க்கும் மேற்பட்ட நீர் நிலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டம் நீர்ப் பாதுகாப்பை உறுதி செய்யும். குறிப்பு நிதி ஆயோக் நிறுவப்பட்டது – 1 ஜனவரி, 2015. நிதி ஆயோக்கிற்கு முன்பு, 1950 மார்ச் 15 அன்று அமைக்கப்பட்ட திட்டக்குழு செயல்பட்டது. முதல் டிஜிட்டல் சென்சஸ் மே 22 ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையரின் அலுவலகமான ஜங்கனனா பவனைத் திறந்து வைத்தார். “மொபைல் செயலி” மூலம் முதல் டிஜிட்டல் சென்சஸ். பொது மக்கள் தங்களைப் பற்றிய சுய விவரங்களை, நேரடியாக அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. குறிப்பு 1881 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.

