தொழில் துறை உற்பத்திக் குறியீடு (IIP) – ஏப்ரல் 2026 சூழல்: இந்தியாவின் தொழில் துறை உற்பத்திக் குறியீட்டு (IIP) வளர்ச்சி 2026 ஏப்ரல் மாதத்தில் 4.9% ஆகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில் இது 5.7% ஆக இருந்தது. மத்தியகிழக்கு போர்ச் சூழலால் எரிசக்தித் துறையில் ஏற்பட்ட மந்தநிலை வளர்ச்சிக் குறைவிற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. துறை வாரியான செயல்திறன் உற்பத்தித் துறை 6.2% வளர்ச்சி. மின்சாரம் மற்றும் எரிவாயு விநியோகத் துறை: 4.9% வளர்ச்சி. குடிநீர் விநியோகம் மற்றும் கழிவு மேலாண்மைத் துறை: 6.6% வளர்ச்சி. சுரங்கம் மற்றும் குவாரித் துறை: 5.1% வீழ்ச்சி. அடிப்படை ஆண்டு மாற்றம் IIP-இன் அடிப்படை ஆண்டு 2011-12 இலிருந்து 2022-23 ஆக மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. தொழில்துறை உற்பத்தியை தற்போதைய பொருளாதார சூழலுக்கு ஏற்ப துல்லியமாக மதிப்பிடுவதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய அடிப்படை ஆண்டின் அடிப்படையில் வெளியிடப்பட்ட முதல் அதிகாரப்பூர்வ தரவு இதுவாகும். IIP பட்டியலில் செய்யப்பட்ட மாற்றங்கள் தற்கால நுகர்வு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் 120 புதிய பொருள்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பயன்பாடு குறைந்த 64 பொருள்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. புதிதாக சேர்க்கப்பட்ட பொருள்கள் சிசிடிவி கேமராக்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மருத்துவ ஸ்டெண்டுகள் தடுப்பூசிகள் விமானம் மற்றும் விண்கலப் பாகங்கள் நீக்கப்பட்ட பொருள்கள் மண்ணெண்ணெய் சிஎஃப்எல் விளக்குகள் தையல் இயந்திரங்கள் அச்சு இயந்திரங்கள் புதிய மாற்றங்களின் முக்கியத்துவம் இந்திய தொழில்துறையின் பன்முகத்தன்மை மற்றும் புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்களை துல்லியமாக பிரதிபலிக்கிறது. புதுப்பிக்கத்தக்க மற்றும் புதுப்பிக்க இயலாத எரிசக்தி மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் தனித்தனி குறியீடுகள் மூலம் கண்காணிக்கப்படும். தரவு வெளியீட்டு நடைமுறை இனி ஒவ்வொரு மாதத்திற்குமான IIP தரவுகளும் அந்த மாதம் முடிவடைந்த 28 நாட்களுக்குள் தொடர்ந்து வெளியிடப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

