தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-6 (2023-24) பின்னணி : தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -6 (2023-24) மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டில் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. முன்னணி முகமை (Nodal Agency): மக்கள் தொகை அறிவியலுக்கான சர்வதேச நிறுவனம் (IIPS). கணக்கெடுப்பு வரம்பு: 715 மாவட்டங்களில் உள்ள சுமார் 6.79 லட்சம் வீடுகளில் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பயன்பாடு: மக்கள் தொகை, சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் குடும்ப நலக் குறியீடுகள் குறித்த மாவட்ட அளவிலான தரவுகளை இது வழங்குகிறது. தாய் மற்றும் சேய் நலம் மருத்துவமனை பிரசவங்கள்: 88.6 சதவீதத்திலிருந்து 90.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பு (ANC): கர்ப்பிணிப் பெண்கள் மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பு பெறுவது 92.6 சதவீதத்திலிருந்து 95.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. முதல் மூன்று மாத பராமரிப்பு: கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களிலேயே ANC பராமரிப்பு பெறும் தாய்களின் எண்ணிக்கை 70.0 சதவீதத்திலிருந்து 76.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. குறைந்தபட்ச பராமரிப்பு: குறைந்தபட்சம் நான்கு முறை ANC பரிசோதனை செய்துகொண்ட தாய்களின் எண்ணிக்கை 58.5 சதவீதத்திலிருந்து 65.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. திறன்மிகு பிரசவம்: தகுதிவாய்ந்த சுகாதாரப் பணியாளர்கள் முன்னிலையில் நடந்த பிரசவங்கள் 89.4 சதவீதத்திலிருந்து 91.3 சதவீதமாக அதிகரித்துள்ளன. பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு: பிரசவம் முடிந்த இரண்டு நாட்களுக்குள் பராமரிப்பு பெறுவது 79.1 சதவீதத்திலிருந்து 85.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. குடும்பக் கட்டுப்பாடு மொத்த மகப்பேறு விகிதம் (TFR): இந்தியாவின் மொத்த மகப்பேறு விகிதம் 2.0 என்ற அளவிலேயே ஸ்திரமாக நீடிக்கிறது. கருத்தடை பயன்பாட்டு விகிதம் (CPR): இது 66.7 சதவீதத்திலிருந்து 69.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. நோய் எதிர்ப்புத் தடுப்பூசி முழுமையான தடுப்பூசி செலுத்துதல்: 12 முதல் 23 மாத வயதுடைய குழந்தைகளுக்கான முழுமையான தடுப்பூசி கவரேஜ் 83.8 சதவீதத்திலிருந்து 87.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. குறைந்தபட்ச தடுப்பூசி: 96 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசியையாவது பெற்றுள்ளனர். அரசு மருத்துவமனைகளின் பங்கு: 95.6 சதவீத குழந்தைகளுக்கு அரசு சுகாதார நிலையங்கள் மூலமாகவே பெரும்பாலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ரோட்டாவைரஸ் தடுப்பூசி: இதன் கவரேஜ் 36.4 சதவீதத்திலிருந்து 85.4 சதவீதமாக பெருமளவு அதிகரித்துள்ளது. தட்டம்மை தடுப்பூசி: தட்டம்மை தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் கவரேஜ் 58.6 சதவீதத்திலிருந்து 71.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. குழந்தை ஊட்டச்சத்து வளர்ச்சிக் குறைபாடு (Stunting): ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே காணப்படும் வளர்ச்சிக் குறைபாடு 35.5 சதவீதத்திலிருந்து 29.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடுமையான மெலிவுத்தன்மை (Severe wasting): இது 7.7 சதவீதத்திலிருந்து 5.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. உடல் எடைக் குறைவு (Underweight): இதற்கான விகிதம் 32.1 சதவீதத்திலிருந்து 31.8 சதவீதமாகச் சற்றே குறைந்துள்ளது. துணை உணவு: 6 முதல் 8 மாதக் குழந்தைகளுக்குத் துணை உணவு வழங்குவது 45.9 சதவீதத்திலிருந்து 59.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. சுகாதாரக் காப்பீடு கவரேஜ் காப்பீட்டு வரம்பு: சுகாதாரக் காப்பீடு அல்லது மருத்துவ நிதியுதவித்…

