முன்முயற்சிகள் /திட்டங்கள் உடன்குடி அணல் மின் நிலையம் பின்னணி : தமிழ்நாடு முதலமைச்சர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ரூ.1,3077 கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய அணல் மின் நிலையத்தை தொடங்கி வைத்தார். இந்த மின் நிலையம் தலா 660 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகள் உடையது. இது மிக உயரழுத்த (சூப்பர் கிரிட்டிக்கல்) தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட உயர் திறன் கொண்ட அனல் மின் நிலையமாகும். மின் நிலையத்திற்கு நிலக்கரி கொண்டு வர கரையிலிருந்து 9 கி.மீ தொலைவில் நடுக்கடலில் கப்பல் தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்திக்கு குறைந்த அளவு நிலக்கரி தேவைப்படுவதால் கார்பன் டைஆக்சைடு உமிழ்வு 25–30% வரை குறைகிறது. இந்த திட்டம் மூலம் மாநிலத்தின் மின் உற்பத்தித் திறன் அதிகரித்து வெளிச்சந்தையில் மின் கொள்முதல் குறையும். TNSCST – ICMR புரிந்துணர்வு ஒப்பந்தம் பின்னணி : கல்வி, உயிரி-தொழில்துறையில் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள், அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு போன்றவற்றில் பலப்படுத்துதல் தொடர்பாக, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் (TNSCST) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் மருத்துவ ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property) பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக செய்யப்பட்டது. கல்வி நிறுவனங்களில் உருவாகும் உயிரி-மருத்துவ கண்டுபிடிப்புகளை பாதுகாக்கவும் தொழில்நுட்ப பரிமாற்றத்தை மேம்படுத்தவும் இது உதவும். தமிழ்நாடு அதிக காப்புரிமை விண்ணப்பங்கள் தாக்கல் செய்த மாநிலமாக முன்னிலை பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தம் நீதி ஆயோக் (NITI Aayog) வழிகாட்டுதலின் கீழ் டெல்லியில் கையெழுத்திடப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் 1984-ம் ஆண்டு தன்னாட்சி பெற்ற நிறுவனமாக தமிழக அரசால் நிறுவப்பட்டது. நடப்பு தகவல்கள் 2021-26 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் தாய் இறப்பு விகிதம் ஒரு லட்சம் உயிருள்ள பிறப்புகளுக்கு 35 ஆக உள்ளது. திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 2019 இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) இது 1911-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட உலகின் பழமையான மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாகும். இது இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள சுகாதார ஆராய்ச்சித் துறையின் மூலம் நிதியைப் பெறுகிறது. இந்தியாவில் உயிரி மருத்துவ ஆராய்ச்சியை வழிநடத்துவதிலும், ஒருங்கிணைப்பதிலும் மற்றும் மேம்படுத்துவதிலும் ICMR முக்கியப் பங்கு வகிக்கிறது. தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் 3 சிறப்பு இணையப் பக்கங்கள் வெளியீடு பின்னணி : தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் எண்ம சேவைகள் துறை அமைச்சர் மூன்று புதிய இணையப் பக்கங்களை தொடங்கி வைத்தார். தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் “தமிழில் பெயர்கள்”, “நாட்டுடைமை நூல்கள்”, “தமிழ்நாடு பண்பாட்டு மின் நிலவரை ஏடு” என்ற இணையப் பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த இணையப் பக்கங்கள் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. “தமிழில் பெயர்கள்” பக்கத்தில் குழந்தைகளுக்கான தமிழ்ப்…

