Tag: தமிழ்நாடு- சாக்சனி வணிக மாநாடு

தமிழ்நாடு விவகாரங்கள்

கோவளம் கடற்கரை நீலக்கொடி சான்றிதழ் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கோவளம் கடற்கரைக்கு 2025-2026 காலகட்டத்தில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக சர்வதேச நீலக் கொடி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 21, 2021 அன்று சான்றிதழைப் பெற்ற தமிழ்நாட்டின் முதல் கடற்கரை இதுவாகும். டென்மார்க்கின் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை (FEE) நிர்ணயித்த கடுமையான உலகளாவிய தரநிலைகளை கடற்கரை பூர்த்தி செய்ததுள்ளது. தேசிய மற்றும் சர்வதேச குழுக்களின் விரிவான ஆய்வுகளுக்குப் பிறகு ஆண்டுதோறும் சான்றிதழ் புதுப்பிக்கப்படுகிறது. அரசாங்க முயற்சி: கோவளத்தின் வெற்றியின் அடிப்படையில், மாநிலம் முழுவதும் உள்ள 10 கடற்கரைகளுக்கு நீலக் கொடி சான்றிதழைப் பெறுவதை தமிழ்நாடு அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. முன்மொழியப்பட்ட கடற்கரைகளில் சென்னையில் உள்ள பாலவாக்கம், திருவான்மியூர் மற்றும் உத்தண்டி ஆகியவை அடங்கும். தமிழ்நாடு- சாக்சனி வணிக மாநாடு தென்னிந்திய வர்த்தக சபை மற்றும் ஜெர்மனியின் சாக்சனி மாநில அரசு சார்பாக தமிழ்நாடு- சாக்சனி வணிக மாநாடு 2025 சென்னையில் 11.11.25 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வு 'தமிழ்நாடு- சாக்சனி வணிக மாநாடு' என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டது தமிழ்நாடு அரசுடன் குறைக்கடத்தி மற்றும் நுண் மின்னணுவியல் துறைகளில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக ஜெர்மன் அமைச்சர் கூறியுள்ளார். இந்தியா உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாகும். தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் MSME கூட்டாண்மைகளை வலுப்படுத்துதல் மற்றும் புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது