பொது அறிவியல் டெங்கு பின்னணி: சென்னை, ஜனவரி 3, 2025 - நாட்டில் அதிக டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாட்டில் 20,866 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏடிஸ் எஜிப்டி கொசுக்களின் பெருக்கமே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. டெங்கு பற்றி டெங்கு என்பது ஏடிஸ் எஜிப்டி கொசு கடிப்பதால் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். இது நான்கு வெவ்வேறு சீரோடைப்களைக் கொண்டுள்ளது – DEN-1, DEN-2, DEN-3 மற்றும் DEN-4. இந்தியாவில், தேசிய டெங்கு தினம் மே 16 அன்று அனுசரிக்கப்படுகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் சமீபத்திய கண்டுபிடிப்பு பென்னு விண்கற்கள் நாசாவின் OSIRIS-REx விண்கலம் 2020-ல் பென்னு விண்கற்கலிருந்து மாதிரிகளைச் சேகரித்து, செப்டம்பர் 2023-ல் அவற்றை பூமிக்குத் திரும்பக் கொண்டு வந்தது. பென்னுவில் உயிருக்குத் தேவையான முக்கிய மூலக்கூறுகள் உள்ளன என்று ஆராய்ச்சிக் குழுக்கள் தெரிவித்துள்ளன: சர்க்கரைகள்: ரைபோஸ் (RNA சர்க்கரை) மற்றும் குளுக்கோஸ் (வளர்சிதை மாற்றம்), அமினோ அமிலங்கள், டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ-வில் காணப்படும் ஐந்து நியூக்ளியோபேஸ்களும் ஆகும்.

