Tag: ஜல் ஜீவன் இயக்கம் (JJM) 2.0

தேசிய திட்டங்கள்

ஜல் ஜீவன் இயக்கம் (JJM) 2.0 சூழல்: தமிழக முதல்வர் மற்றும் மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் ஆகியோர் முன்னிலையில் ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டத்தின் நீட்டிக்கப்பட்ட செயலாக்கக் காலத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது. ஜல் ஜீவன் மிஷன் திட்டம் முதற்கட்டமாக 2019-ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டது. தற்போது மத்திய அரசு இத்திட்டத்தை 2028-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டித்துள்ளது. ஜல் ஜீவன் இயக்கம் (JJM) அறிமுகம் 15 ஆகஸ்ட் 2019 அன்று தொடங்கப்பட்டது. நோக்கம்: ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பத்திற்கும் செயல்படும் வகையிலான வீட்டுத் குழாய் இணைப்பை (FHTC) வழங்குதல். சமூகம் சார்ந்த மற்றும் அதிகாரப் பரவல் கொண்ட அணுகுமுறையின் அடிப்படையில் செயல்படுகிறது. திட்டமிடல், செயல்படுத்துதல் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை கிராமப் பஞ்சாயத்துகளும் கிராம நீர் மேலாண்மைக் குழுக்களும் நிர்வகிக்கின்றன. முதன்மைஅமைச்சகம்: ஜல் சக்தி அமைச்சகம். முக்கிய அம்சங்கள் அனைவருக்கும் குழாய் இணைப்பு: ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் குழாய் நீர் இணைப்பு கிடைக்கிறது. சேவைத் தரம்: ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 55 லிட்டர் (LPCD) நீர் வழங்கல். நீரின் தரத்தைக் கண்காணித்தல்: சோதனைக் கருவிகள் வழங்கப்பட்டு, கண்காணிப்பிற்காக உள்ளூர் பெண்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. தொழில்நுட்ப அடிப்படையிலான ஆளுகை: டிஜிட்டல் டாஷ்போர்டுகள், புவிக்குறியிடல் மற்றும் இணையவழி கண்காணிப்பு ஆகியவற்றின் பயன்பாடு. அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை: பட்டியல் சாதியினர்/பழங்குடியினர் கிராமங்கள், முன்னேற விரும்பும் மாவட்டங்கள் மற்றும் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் சிறப்பு கவனம். நிதி ஒதுக்கீட்டு முறை பொதுவான மாநிலங்கள்: மத்திய மற்றும் மாநில அரசுகள் 50:50 என்ற விகிதத்தில் செலவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்கள்: மத்திய மற்றும் மாநில அரசுகள் 90:10 என்ற விகிதத்தில் செலவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. யூனியன் பிரதேசங்கள் (UTs): முழுமையாக மத்திய அரசால் நிதியளிக்கப்படுகிறது.   ஜல் ஜீவன் இயக்கம் (JJM) 2.0 அமைச்சரவை ஒப்புதல் ஜல் ஜீவன் இயக்கத்தை  உள்கட்டமைப்பை மையமாகக் கொண்ட ஒரு திட்டத்திலிருந்து, சேவை வழங்கலை முதன்மையாகக் கொண்ட ஒரு இயக்கமாக மறுசீரமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. சிறந்த நிர்வாகம் மற்றும் நிறுவன வழிமுறைகள் வாயிலாக, கிராமப்புறங்களுக்குக் குழாய் மூலம் நிலையான குடிநீர் விநியோகத்தை வழங்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது. சுஜலம் பாரத் டிஜிட்டல் கட்டமைப்பு “சுஜலம் பாரத்” எனும் பெயரிலான ஒரு தேசிய டிஜிட்டல் தளம் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு தனித்துவமான ‘சுஜல் காவ்ன்’ / சேவைப் பகுதி அடையாள எண் வழங்கப்படும். குடிநீர் விநியோக அமைப்பு முழுமையும்  நீர் ஆதாரம் முதல் குழாய் முனை வரை  டிஜிட்டல் முறையில் வரைபடமாக்கப்படும். 'ஜல் அர்ப்பண்' முன்னெடுப்பு கிராமப் பஞ்சாயத்துகளும் கிராம நீர் மற்றும் சுகாதாரக் குழுக்களும்  இத்திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதிலும், அதனை ஒப்படைப்பதிலும் பங்கேற்கும். இது வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை மற்றும் சமூகத்தின் உரிமையுணர்வு ஆகியவற்றை உறுதி செய்கிறது. ஹர் கர் ஜல் சான்றிதழ்…