சில்லறை பணவீக்கப் போக்குகள் சூழல்: நாட்டின் சில்லறை பணவீக்கம் கடந்த மாதம் 3.4% ஆக அதிகரித்துள்ளது. இது இந்த ஆண்டு பிப்ரவரியில் பதிவான 3.21% விட அதிகமாகும். புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, கிராமப்புறங்களில் பணவீக்கம் 3.63% ஆகவும், நகர்ப்புறங்களில் இது 3.11% ஆகவும் உயர்ந்துள்ளது. அனைத்திந்திய நுகர்வோர் உணவு விலை குறியீட்டின் அடிப்படையில், மார்ச் மாதத்தில் உணவுப் பணவீக்க விகிதம் 3.87% ஆக இருந்தது. இது முந்தைய மாதத்தில் 3.47% ஆக இருந்தது. அதிக பணவீக்கத்தைக் காட்டும் முக்கிய பொருட்கள்: தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள், தேங்காய், தக்காளி மற்றும் காலிஃபிளவர். குறைந்த பணவீக்கம் கொண்ட பொருட்கள்: வெங்காயம், உருளைக்கிழங்கு, பூண்டு, துவரம் பருப்பு மற்றும் பட்டாணி அல்லது கொண்டைக்கடலை. சில்லறை பணவீக்கம் பற்றி சில்லறை பணவீக்கம் அல்லது நுகர்வோர் விலை குறியீட்டு (CPI) பணவீக்கம் என்பது குடும்பங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளில் ஏற்படும் மாற்றங்களை அளவிடுகிறது. இது நுகர்வோர் மீதான அன்றாடச் செலவுச் சுமையை பிரதிபலிக்கிறது. நுகர்வோர் விலை குறியீடு (CPI) உணர்த்துபவை வீட்டு உபயோகச் செலவுகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தைப் பராமரிப்பது எவ்வளவு கடினமாகிறது என்பதைக் கண்காணிக்கிறது. பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கும் நுகர்வோரின் திறனைக் காட்டுகிறது. பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளின் ஒப்பீட்டுச் செலவைப் பிரதிபலிக்கிறது. வாங்கும் திறனைப் பொறுத்து இந்திய ரூபாயின் உண்மையான மதிப்பை உணர்த்துகிறது. கணக்கிடும் முறை CPI சதவீதக் குறியீடாகக் குறிப்பிடப்படுகிறது. இது தற்போதைய விலைகளை ஒரு குறிப்பிட்ட ஆண்டின் (Base Year) விலைகளுடன் ஒப்பிடுகிறது. CPI அடிப்படை ஆண்டு 2024 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களுக்கான நுகர்வுப் பொருட்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவ அளவீடுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. நடப்பு தகவல்கள் பகுதி V, சரத்து 81: மக்களவையின் கட்டமைப்பு (மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வு முறை). பகுதி V, சரத்து 82: ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகும் தொகுதிகளை மறுசீரமைத்தல். தொகுக்கும் அதிகாரம் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) கீழ் உள்ள தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) CPI தரவைத் தொகுக்கிறது. இது ஒவ்வொரு மாதமும் கிராமப்புறம், நகர்ப்புறம், ஒருங்கிணைந்த துறைகள் மற்றும் மாநில வாரியான CPI புள்ளிவிவரங்களை வெளியிடுகிறது. CPI-ன் பயன்கள் பொருளாதாரத்தில் பணவீக்கத்தின் முக்கிய குறிகாட்டியாகச் செயல்படுகிறது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், விலை நிலைத்தன்மையைப் பராமரிக்கவும் மத்திய வங்கி (RBI) மற்றும் அரசாங்கத்திற்கு உதவுகிறது. தேசியக் கணக்குகளில் பெயரளவு மதிப்புகளைச் சரிசெய்ய (Deflator) பயன்படுத்தப்படுகிறது. உண்மையான ஊதியங்கள், சம்பளங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் பணத்தின் வாங்கும் திறன் ஆகியவற்றை மதிப்பிட உதவுகிறது. வட்டி விகிதங்கள் மற்றும் பொருளாதாரக் கட்டுப்பாடு தொடர்பான கொள்கை முடிவுகளை எடுக்க வழிகாட்டுகிறது.

