Tag: ககன்யான் திட்டம் (Gaganyaan Mission)

அறிவியல்

விண்வெளி ககன்யான் திட்டம் (Gaganyaan Mission) மனிதரை விண்வெளிக்கு அனுப்பி பாதுகாப்பாக பூமிக்கு அழைத்துவரும் இந்தியாவின் முதல் திட்டம். திட்டமிட்ட இலக்கு – 2027. 400 கி.மீ உயரத்திற்கு விண்கலம் அனுப்பி, 3 நாட்கள் ஆய்வுசெய்யப்படவுள்ளது . இத்திட்டம் வெற்றி பெற்றால் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக மனிதரை விண்வெளிக்கு அனுப்பும் 4வது நாடாக இந்தியா மாறும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரர்கள் பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் , சுபான்ஷு சுக்லா  இவர்களுக்கு ரஷியாவில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆளில்லா சோதனைகள் (Unmanned Missions) மனிதர்களை அனுப்புவதற்கு முன் 3 ஆளில்லா விண்கல சோதனைகள் நடத்தப்படும். முதலாவது சோதனையில் வியோமித்ரா (Vyomitra) என்ற மனித உருவ ரோபோ அனுப்பப்படும். வியோமித்ராவின்  திறன்கள்: விண்வெளி வீரர்களுக்கு கட்டளைகளை புரிந்து பதிலளிக்க முடியும். ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளை புரிந்து செயல்படும். காற்றழுத்தம், வெப்பநிலை, சுற்றுச்சூழல் நிலைகள் போன்றவற்றைக் கண்காணிக்கும். சுற்றுச்சூழல் கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கை அமைப்புகளை இயக்கும். மனிதர் செய்யும் பல செயல்களை செய்யும். பூமி கட்டளை மையத்துடன் தொடர்ச்சியான தொடர்பில் இருக்கும். அனைத்து ஆளில்லா சோதனைகள் வெற்றியடைந்தால், 2027-ஆம் ஆண்டு மனித விண்வெளி பயணம் நடைபெறும். பாரதிய அந்தரீஷ் ஸ்டேஷன் (இந்திய விண்வெளி நிலையம்) ககன்யான் திட்டம்  வெற்றியடைவதன் பிறகு, பூமியிலிருந்து 400 கிமீ உயரத்தில் “பாரதிய அந்தரீஷ் ஸ்டேஷன்” நிறுவப்படும். 2035க்குள் இந்திய விண்வெளி நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியாவின் ஆரம்ப விண்வெளி முயற்சிகள் 1963, நவம்பர் 21 – இந்தியா முதல் ஆராய்ச்சி ராக்கெட்டை ஏவியது. 1984, ஏப்ரல் 3 – Rakesh Sharma சோவியத் Soyuz T-11 மூலம் விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர். உலக விண்வெளி வரலாறு – முக்கிய நிகழ்வுகள் 1926, மார்ச் 16 – அமெரிக்க விஞ்ஞானி Robert H. Goddard முதல் திரவ எரிபொருள்  ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவினார். 1944, ஜூன் 20 – ஜெர்மனியின் V-2 ராக்கெட் 174 கி.மீ உயரம் சென்றது. 1957, அக்டோபர் 4 – சோவியத் ஒன்றியம் Sputnik 1 ஏவியது (முதல் செயற்கைக்கோள்). 1957, நவம்பர் 3 – Sputnik 2 மூலம் ‘லைக்கா’ நாய் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. 1961, ஏப்ரல் 12 – Yuri Gagarin விண்வெளிக்கு சென்ற முதல் மனிதர். 1969, ஜூலை 16 – அமெரிக்காவின் Apollo 11 நிலவுக்கு பயணம்.