Tag: ஒரு ரூபாயில் எங்கும் பயணிக்கலாம்

தமிழ்நாடு விவகாரங்கள்

தோழி' விடுதி திட்டம் உலக மகளிர் தின விழாவில் தமிழக முதல்வர் இதனை அறிவித்தார். தமிழ்நாடு அரசின்  சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையானது, பணிபுரியும் பெண்களுக்காக ஒன்பது மாவட்டங்களில் பதினொரு தங்கும் விடுதிகளைத் தொடங்கியுள்ளது. இவ்வகை விடுதிகளுக்கு 'தோழி' (பெண் தோழர்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இவ்விடுதி தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதி கழகம் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் செயல்பட உள்ளது. பெண்களுக்குப் பாதுகாப்பான மற்றும் விலை மலிவானத் தங்குமிடங்களை வழங்கச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்  இந்த திட்டத்தின்  விடுதிகள் சென்னை, செங்கல்பட்டு, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழகத்தில் ரூ.62.51 கோடியில் புதிதாக 12 இடங்களில் தோழி விடுதிகள் கட்ட முதல்வர் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டியுள்ளார். தமிழகத்தில் ஏற்கெனவே 19 தோழி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், 14 விடுதிகளுக்கான தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தோழி விடுதிகள், கூர்நோக்கு இல்லம் உள்ளிட்ட கட்டடங்கள் கட்டபட உள்ளன. மயிலாடுதுறை, விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி,ராமநாதபுரம், தூத்துக்குடி புதுக்கோட்டை, அரியலூர், திருவாரூர், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் 740 ஊழியர்கள் தங்கும் வகையில் இந்த விடுதிகள் கட்டப்படவுள்ளன. மேலும் கோவை மாவட்டத்தில் 'பூஞ்சோலை' எனும் பெயரில் அரசு மாதிரி கூர்நோக்கு கட்டடங்களும் அமைய உள்ளன. பெண்களுக்கு புற்றுநோய் கண்டறிய நடமாடும் மருத்துவ ஊர்தி பெண்களின் வசிப்பிடங்களுக்கே சென்று புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை கண்டறியக்கூடிய நவீன வாகனத்தை முதல்வர் 13.11.25 அன்று தொடங்கி வைத்தார்  காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த வாகனம் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.  இத்திட்டமானது மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ், மகளிர் நல்வாழ்வுக்காக ரூ.40 கோடியில் 38 நடமாடும் மருத்துவ ஊர்திகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. புராதனச் சின்ன ஆணையம் அமைப்பு பழமையான மற்றும் புராதன கோயில்கள் மற்றும் சின்னங்களைப் பாதுகாக்க புராதனச் சின்ன ஆணையம் அமைக்க வேண்டும் என்று தமிழக உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பழமையான மற்றும் புராதன கோயில்கள் மற்றும் சின்னங்களைப் பாதுகாக்க புராதன சின்னங்கள் ஆணையச் சட்டம் கடந்தாண்டு முதல் அமலுக்கு வந்தது.  தமிழ்நாடு பாரம்பரிய ஆணையம்  நான்கு வாரங்களுக்குள் தமிழ்நாடு பாரம்பரிய ஆணையத்தை (TNHC) அமைக்க உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மத்திய அல்லது மாநில பழங்கால நினைவுச்சின்னச் சட்டங்களின் கீழ் வராத பழமையான கட்டிடங்கள் மற்றும் வளாகங்களைப் பாதுகாப்பதே TNHCயின் நோக்கம். 2012 இல் இயற்றப்பட்ட TNHC சட்டம், ஆனால் 12 ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருந்தது. மார்ச் 12, 2024 அன்று அமலுக்கு வந்தது. சட்டம் அமலுக்கு வந்த பிறகும் ஆணையம் இன்னும் அமைக்கப்படவில்லை. TNHCயின் அமைப்பு பாரம்பரியப் பாதுகாப்பில் அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு சிறந்த நபர் தலைமையில்அதிகபட்சம் 16 உறுப்பினர்கள், பதவி சார்ந்த உறுப்பினர்கள் உட்பட: சுற்றுலா செயலாளர், நகர்ப்புற மேம்பாட்டு செயலாளர், நகராட்சி நிர்வாக செயலாளர்,…