Tag: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில்

விளையாட்டு

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் பின்னணி : ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) சீர்திருத்தத்தில் புதிய நிரந்தர உறுப்பினர்களுக்கு “வீட்டோ” அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பற்றி  ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் 1945-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் நியூயார்க்கில் அமைந்துள்ளது.  இதில் மொத்தம் 15 உறுப்பினர்கள் உள்ளனர். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய 5 நாடுகள் 'வீட்டோ' (Veto) அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். மீதமுள்ள 10 தற்காலிக உறுப்பினர்கள், புவியியல் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் ஐ.நா. பொதுச் சபையால் இரண்டு ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.  இந்தியா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் நீண்ட காலமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவி பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன. 1960 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே ஒரு முறை மட்டுமே பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் செய்யப்பட்டு, அதில் தற்காலிக உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 இலிருந்து 10 ஆக அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் அமைதிக்கு அச்சுறுத்தல், அமைதி மீறல் அல்லது ஆக்கிரமிப்புச் செயல்கள் நிலவுகிறதா என்பதைத் தீர்மானித்தல். ஐநா உறுப்பு நாடுகளின் மீது கட்டாயத் தீர்மானங்களை பிறப்பித்தல் (மற்ற ஐநா அமைப்புகளின் பரிந்துரைகள் பெரும்பாலும் கட்டாயமற்றவை, ஆனால் பாதுகாப்புச் சபையின் முடிவுகள் சட்டப்படி கட்டுப்படுத்தக்கூடியவை). குறிப்பிட்ட நாடுகளின் மீது பொருளாதாரத் தடைகள் மற்றும் ஆயுதத் தடைகளை  விதித்தல். அமைதிப்படை குழுக்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம் அளித்தல். ஐக்கிய நாடுகள் சபையில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்குப் பரிந்துரை செய்தல். ஐநா பொதுச் செயலாளரை நியமிக்கப் பரிந்துரைத்தல். சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பான வழக்குகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) மாற்றுதல் அல்லது பரிந்துரைத்தல்.   நடப்பு தகவல்கள்   தொகுதி மறுவரையறை திருத்தங்கள் 42வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 1976: மக்களவையில் மாநிலங்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் ஒவ்வொரு மாநிலத்தையும் பிரதேசத் தொகுதிகளாகப் பிரித்தல் ஆகியவற்றை, 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், 2000-ஆம் ஆண்டு வரை மாற்றமில்லாமல் முடக்கியது. 84வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 2001: இந்த முடக்கத்தை 2026-ஆம் ஆண்டு வரை நீட்டித்தது. மேலும், 1991-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைக்க அதிகாரம் அளித்தது. 87வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 2003: மக்களவையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையை மாற்றாமல், 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய அனுமதித்தது.