Tag: உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப்

விளையாட்டு

உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் மேக்னஸ் கார்ல்சன் உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப்பை வென்றார். அர்ஜுன் எரிகைசி உலக பிளிட்ஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார், மேலும் ராபிட் சாம்பியன்ஷிப்பிலும் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார். உலக ராபிட் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் கூட்டுப் போட்டி கத்தார் நாட்டின் தோஹாவில் நடைபெற்றது. கேரம் உலகக் கோப்பை 2025 மாலத்தீவில் நடைபெற்ற 7வது கேரம் உலகக் கோப்பையில், சென்னை வாஷர்மேன்பேட்டையைச் சேர்ந்த கீர்த்தனா, ஒற்றையர், இரட்டையர் மற்றும் அணிகள் என மூன்று பிரிவுகளிலும் தங்கப் பதக்கங்களை வென்றார். ஆசிய இளைஞர் கபடி சாம்பியன்ஷிப் 2025 பஹ்ரைனில் நடைபெற்ற 3வது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கப் பதக்கம் வென்றது. சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா இந்த அணியில் இடம்பெற்றிருந்தார்.