விலையில்லா மிதிவண்டி திட்டம் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு 2002 ஆகும். திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தொடங்கி வைத்தார். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து 11 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கும் இலவச மிதிவண்டி வழங்கப்படும். மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி திட்டத்தின் முக்கிய நோக்கம்,பெண் கல்வியை ஊக்குவித்தல் மற்றும் பள்ளிக்குச் செல்வதில் சிரமப்படும் மாணவர்களுக்கு உதவுதல் ஆகும். குறிப்பாக, கிராமப்புற மற்றும் தொலைதூரங்களில் உள்ள மாணவர்கள் சிரமமின்றி மேல்நிலைப் படிப்பை தொடர்வதற்கு இந்தத் திட்டம் உதவுகிறது. பாதம் பாதுகாப்போம்' திட்டம் தமிழ்நாடு ஒருங்கிணைந்த நீரிழிவு பாத மருத்துவ திட்டம் " "பாதம் பாதுகாப்போம் திட்டம்" என 28.10.24 தொடங்கப்பட்டது மக்கள் நல்வாழ்வுத்துறை முலம் இத்திட்டம் செயல்படுகிறது. நோய் கண்டறிதல், பாத பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு, கால் புண் தடுப்பு, காலணி வழங்குதல், கால் புண் சிகிச்சை, நீரிழிவு பாத அறுவை சிகிச்சைகள், கால்களை இழக்க நேரிடும் போது செயற்கை கால்களை வழங்குதல் என பாத மருத்துவத்தின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒன்றாகும். நீரிழிவு நோயினால் ஏற்படும் நரம்பு உணர்விழப்பு மற்றும் இரத்தநாள அடைப்பு பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதும், தக்க சமயத்திலான இடையீட்டுகளின் மூலம் கால் இழப்புகளை தடுப்பதற்கான செயல்திட்டமே பாதம் பாதுகாப்போம் திட்டத்தின் சாரமாகும். நீரிழிவு நோய் பாத பாதிப்புகளை கண்டறிந்து அவற்றின் தீர்வுகளை ஆய்வு செய்வதற்கும் பரிந்துரைப்பதற்கும் என "பாத மருத்துவ மையம் (Foot Clinic)" முன்மாதிரித் திட்டமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. பள்ளிப்பார்வை - புதிய செயலி அறிமுகம் பள்ளிகளில் ஆய்வுப்பணிகளை மேம்படுத்தும் நோக்கில் பள்ளிப்பார்வை - 2.0' எனும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பள்ளிப்பார்வை செயலியின் அறிமுகம் - 18 பிப்ரவரி 2023 மாநிலம் முழுவதும் மார்ச் 2023-இல் விரிவுபடுத்தப்பட்டது. தமிழகத்தில் பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க 'பள்ளிப் பார்வை' எனும் செயலி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. துறைசார்ந்த அலுவலர்கள் பள்ளி ஆய்வின் போது வகுப்பறை கற்பித்தல், மாணவர் வருகை, கற்றல் நிலை உள்ளிட்டவற்றை மையமாக கொண்டு இந்த செயலியில் குறிப்புகளை பதிவேற்றம் செய்து வந்தனர். தற்போது அதை மேம்படுத்தி 'பள்ளிப் பார்வை-2.0 செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அகநானூற்றுப் பாடலும் – கரடிகளும் கரடிகள் தேனுள்ள இலுப்பைப் பூக்களை விரும்பியுள்ளதை அகநானூறு பல இடங்களில் பதிவுசெய்துள்ளது. கரையான் கட்டிய சிவந்த புற்றில் இருந்த புற்றாஞ்சோற்றை வெறுத்து, இலுப்பை மரத்தின் வெள்ளை மலர்களைப் பெரிய கைகளை உடைய கரடிக் கூட்டம் கவர்ந்து உண்ணும் - அகநானூறு 149ஆம் பாடல். திரண்ட அடிப்பகுதியை உடைய இலுப்பை மரத்தின் துளையுடைய வெள்ளை மலர்களைக் குட்டிக் கரடிகள் பெரும் கூட்டமாக உண்ணும்- அகநானூறு 275ஆம் பாடலில் கூறப்படப்பட்டுள்ளது. முதல்வர் படைப்பகம் முதல்வர் படைப்பகத்தை 4 நவம்பர் 2024 அன்று முதல்வர் கொளத்தூர் (சென்னை) பகுதியில் திறந்து வைத்தார். ஐ.டி.…

