Tag: இந்தியாவின் முதல் ஆற்று வழி கலங்கரை விளக்கங்கள்

தேசிய நிகழ்வுகள்

LPG உற்பத்தியை அதிகரிக்க சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு இந்தியா உத்தரவு பிறப்பித்துள்ளது. பின்னணி : மத்திய கிழக்கு பகுதியில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு அத்தியாவசியப் பொருள்கள் சட்டம், 1955 என்ற சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அவசர அதிகாரத்தை பயன்படுத்தி பிறப்பிக்கப்பட்டுள்ளது. ப்ரோபேன் மற்றும் பூடேன் போன்ற ரசாயனங்களை பயன்படுத்தி எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்க அனைத்து பொது மற்றும் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் இந்த ரசாயனங்களை பயன்படுத்தி பெட்ரோ இரசாயனப் பொருட்கள் தயாரிப்பதற்கு சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய நகரங்கள் PM2.5 வரம்புகளை மீறுகின்றன  சூழல்: மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகளை, 'ஆற்றல் மற்றும் தூய்மையான காற்றுக்கான ஆராய்ச்சி மையம்' (CREA) ஆய்வு செய்ததில், கடந்த குளிர்காலத்தில் ஆய்வு செய்யப்பட்ட 238 இந்திய நகரங்களில் 204 நகரங்களில் PM2.5 அளவானது, இந்திய நிர்ணய அளவான 40 µg/m³-ஐ விட அதிகமாக இருந்தது. காசியாபாத் 172 µg/m³ என்ற சராசரி அளவோடு அதிக மாசுள்ள நகரமாக உள்ளது. அதனைத் தொடர்ந்து நொய்டா (166 µg/m³) மற்றும் டெல்லி (163 µg/m³) உள்ளன. இந்த ஆய்வு, அக்டோபர் 1, 2025 முதல் பிப்ரவரி 28, 2026 வரையிலான CPCB-ன் 'தொடர்ச்சியான சுற்றுப்புற காற்றுத் தர கண்காணிப்பு நிலையங்களின்' (CAAQMS) தரவுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது. எந்தவொரு நகரமும் WHO நிர்ணயித்துள்ள 5 µg/m³ என்ற PM2.5 தரநிலையைப் பூர்த்தி செய்யவில்லை. டெல்லி (163 µg/m³), கொல்கத்தா (78 µg/m³), மும்பை (48 µg/m³) மற்றும் சென்னை (44 µg/m³) ஆகிய நகரங்கள் தேசிய நிர்ணய அளவை விட அதிக குளிர்கால PM2.5 அளவைப் பதிவு செய்துள்ளன. பெங்களூரு (39 µg/m³) மட்டும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட சற்றே குறைவாக உள்ளது. கர்நாடகாவின் சாமராஜநகர் 19 µg/m³ சராசரி மாசு அளவோடு மிகத் தூய்மையான நகரமாக உள்ளது. மிகத் தூய்மையான 10 நகரங்களில் 8 நகரங்கள் கர்நாடகாவிலும், தலா ஒரு நகரம் மத்தியப் பிரதேசம் மற்றும் மேகாலயாவிலும் அமைந்துள்ளன.   ஊட்டச்சத்து மேம்பாட்டிற்கான நிதி ஆயோக் - UNICEF கூட்டு முயற்சி சூழல்: நிதி ஆயோக் மற்றும் UNICEF இந்தியா ஆகியவை மாற்றத்தை விரும்பும் மாவட்டம் (Aspirational Districts) மற்றும் முன்னேற்றதை விரும்பும் வட்டங்களில் (Aspirational Blocks) சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து நிலைகளை வலுப்படுத்துவதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (SoI) கையெழுத்திட்டுள்ளன. நாட்டின் பின்தங்கிய மற்றும் சேவை குறைந்த பகுதிகளில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதே இக்கூட்டு முயற்சியின் முக்கிய நோக்கமாகும். லட்சிய மாவட்டங்கள் திட்டம் மற்றும் லட்சிய தொகுதிகள் திட்டத்தின் கீழ் வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்துவதே இதன் நோக்கம். அங்கன்வாடி கட்டமைப்பை…