உலக வங்கி அறிக்கை – ‘வறுமை மற்றும் சமத்துவம்’
உலக வங்கி அறிக்கையின் படி, 2011-12 மற்றும் 2022-23 இடையே இந்தியாவில் சமத்துவமின்மை கணிசமாக குறைந்துள்ளது, இது உலக அளவில் நான்காவது மிக சமமான நாடாக மாறியுள்ளது.
கடுமையான வறுமை 2011-12 இல் 16.2% இல் இருந்து 2022-23 இல் 2.3% ஆக குறைந்துள்ளது. இந்தியாவின் ஜினி குறியீடு 2011-12 இல் 28.8 இல் இருந்து 2022-23 இல் 25.5 ஆக உள்ளது, இது ஸ்லோவாக் குடியரசு, ஸ்லோவேனியா மற்றும் பெலாருஸ் நாடுகளுக்கு அடுத்து உலகில் நான்காவது மிக சமமான நாடாக மாறியுள்ளது.
இந்த மாற்றத்துக்கு காரணாமான பல்வேறு அரசு திட்டங்களையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
பிரதான மந்திரி ஜன் தன் யோஜனா 55 கோடிக்கும் அதிகமான வங்கிக் கணக்குகளுடன் நிதி உள்ளடக்கத்தை விரிவுபடுத்தியுள்ளது.
தேசிய டிஜிட்டல் அடையாள அமைப்பான ஆதார், இப்போது 142 கோடிக்கும் அதிகமான மக்களை உள்ளடக்கியுள்ளது, நேரடி பலன் பரிமாற்றம் மூலம் நலத்திட்டகளை வழங்குவதை மிகவும் திறன்மிக்கதாக ஆக்கியுள்ளது மற்றும் மார்ச் 2023 வரை ரூ.3.48 லட்சம் கோடி சேமித்துள்ளது.
ரூ.5 லட்சம் சுகாதார காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்கள் 41 கோடிக்கும் அதிகமான அட்டைகளை வழங்கியுள்ளன, இது சுகாதார சமத்துவத்தையும் மேம்படுத்தியுள்ளது.
ஸ்டாண்ட்-அப் இந்தியா போன்ற திட்டங்கள் பட்டியல் சாதி/பட்டியல் பழங்குடியின மற்றும் பெண் தொழில்முனைவோர்களை ஆதரிக்கின்றன, பிரதான மந்திரி விஸ்வகர்மா யோஜனா கைவினைஞர்களுக்கு கடன் மற்றும் பயிற்சி மூலம் உதவுகிறது.
பிஎம்ஜிகேஏய் (பிரதான மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா) உணவு பாதுகாப்பு திட்டத்தை 80 கோடிக்கும் அதிகமான மக்களை ஆதரித்துள்ளனர்
ஜினி குறியீடு பற்றி
ஜினி குறியீடு ஒரு நாட்டின் குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் மத்தியில் வருமானம், செல்வம் அல்லது நுகர்வு எவ்வாறு சமமாக விநியோகம் செய்யப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள உதவுகிறது.
இது பூஜ்ஜியம் (முழுமையான சமத்துவம்) முதல் 100 (அதிகபட்ச சமத்துவமின்மை) வரை மதிப்பு கொண்டுள்ளது.
ஜினி குறியீடு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக ஒரு நாடு சமத்துவமற்றதாக இருக்கிறது என்று பொருள்

