பொருளாதாரம்

அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்

முதல் முறையாக உலகளாவிய SDG தரவரிசையில் முதல் 100 இடங்களில் இந்தியா

ஐ.நா. நிலையான வளர்ச்சி தீர்வுகள் வலையமைப்பு வெளியிட்ட நிலையான வளர்ச்சி அறிக்கையின் (SDR) 2025 பதிப்பு.

2025 நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG) குறியீட்டில் 167 நாடுகளில் இந்தியா 99வது இடத்தைப் பிடித்துள்ளது. இது 2024இல் 109வது இடத்திலிருந்து முன்னேறியுள்ளது மதிப்பெண்: 100இல் 67.

இந்தியா தொடர்ந்து தனது நிலையை மேம்படுத்தியுள்ளது: 2023இல் 112வது, 2022இல் 121வது மற்றும் 2021இல் 120வது இடத்தில் இருந்தது.

பின்லாந்து, ஸ்வீடன் மற்றும் டென்மார்க் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன, முதல் 20 நாடுகளில் 19 நாடுகள் ஐரோப்பாவில் அமைந்துள்ளன.

இந்தியாவின் அண்டை நாடுகளில், பூட்டான் 74வது (70.5), நேபாளம் 85வது (68.6), பங்களாதேஷ் 114வது (63,9), மற்றும் பாகிஸ்தான் 140வது (57) இடத்தில் உள்ளன.

கடல் அண்டைநாடுகளான மாலத்தீவுகள் மற்றும் இலங்கை முறையே 53வது மற்றும் 93வது இடங்களில் உள்ளன.

உலகளாவிய முன்னேற்றம்: SDG இலக்குகளில் வெறும் 17 சதவீதம் மட்டுமே 2030க்குள் அடையப்படும் பாதையில் உள்ளது.

Next பொருளாதாரம் >