வரலாறு

பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம்

பாசெக்ஸ் 2025

  • இந்திய கடற்படை ஜூன் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் வட அரேபியக் கடலில் இங்கிலாந்தின் கேரியர் ஸ்ட்ரைக் குழுவுடன் உயர்நிலை வழித்தட  பயிற்சியினை  (பாசெக்ஸ்) நடத்தியது.
  • இந்த பயிற்சியில் ஐஎன்எஸ் தபர் என்ற ஸ்டெல்த் போர்க்கப்பல், இந்திய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் பி-8ஐ கடல்சார் ரோந்து விமானம் ஆகியவை இங்கிலாந்தின் எச்எம்எஸ் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் மற்றும் எச்எம்எஸ் ரிச்மண்ட் கப்பல்களுடன் இணைந்து செயல்பட்டன.
  • இந்த கடற்படை பயிற்சி இந்திய கடற்படைக்கும் ராயல் கடற்படைக்கும் இடையே ஆழமடைந்து வரும் ஒத்துழைப்பை நிரூபிக்கிறது.
  • ஒருங்கிணைந்த ஹெலிகாப்டர் கட்டுப்பாடு, தந்திரோபாய நடவடிக்கைகள் மற்றும் ஒருங்கிணைந்த நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவை இந்த ஒத்துழைப்பில் அடங்கியிருந்தன என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
Next Current Affairs வரலாறு >