சம்விதான் ஹத்யா திவாஸ்
- ‘சம்விதான் ஹத்யா திவாஸ்’ (இதன் பொருள் ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’) என்பது இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூன் 25 அன்று அனுசரிக்கப்படும் ஒரு நாளாகும்.
- இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட இந்நாள், 1975-ஆம் ஆண்டு ஜூன் 25 அன்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் நாடு தழுவிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதை நினைவுகூருவதோடு, அதனால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான குடிமக்களையும் கௌரவிக்கிறது.
கடல்சார் பணியாளர் தினம்
- ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25 அன்று கடைபிடிக்கப்படும் ‘கடல்சார் பணியாளர் தினம்’, ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரப்பூர்வமான ஒரு சிறப்பு நாளாகும்.
- 2026-ஆம் ஆண்டிற்கான கடல்சார் பணியாளர் தினத்தின் கருப்பொருள் “Carrying world trade. Carrying the risks” என்பதாகும்.
உலக வெண்குஷ்டி விழிப்புணர்வு நாள் 2026
- வெண்குஷ்டி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கவும் 2026-ஆம் ஆண்டு ஜூன் 25 அன்று உலகம் முழுவதும் ‘உலக வெண்குஷ்டி விழிப்புணர்வு நாள்‘ கடைப்பிடிக்கப்பட்டது.
- 2026-ஆம் ஆண்டிற்கான உலக வெண்குஷ்டி விழிப்புணர்வு நாளின் உலகளாவிய கருப்பொருள் From Stigma to Strength என்பதாகும்.

