முன்முயற்சி/திட்டம்
க்யூஆர் கோட் மூலம் அரசு பள்ளியில் ஆன்லைன் மாணவர் சேர்க்கை
- சூழல்: க்யூ.ஆர். கோட் மூலம் ஆம்பூர் அரசு பள்ளியில் ஆன்லைன் மாணவர் சேர்க்கை மேற்கொள்ள புதிய முயற்சி மேற் கொள்ளப்பட்டு செயல்படுத்தப் பட்டுவருகிறது.
- திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியில் 2026 – 2027-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பணிகள் எண்ம முறையில் புதுமையாக முன்னெடுக்கப் பட்டுள்ளது.
- அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கச் செய்யும் நோக்கிலும், பெற்றோர்களுக்கு எளிய மற்றும் விரைவான தங்களுடைய பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் நோக்கிலும், பள்ளி ஆசிரியர்கள் இணைந்து QR Code அடிப்படையில் ஆன்லைன் சேர்க்கை முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
- பள்ளி வளாகம், முக்கிய தெருக்களின் சந்திப்புகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் க்யூ. ஆர். கோட் உடன் கூடிய விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
- துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. பெற்றோர்கள் தங்களது கைப்பேசி மூலம் க்யூ.ஆர். கோட் மூலம் ஸ்கேன் செய்து, மாணவர்களின் பெயர், வகுப்பு, பெற்றோர் விவரம் உள்ளிட்ட தகவல்களை ஆன்லைனில் பதிவு செய்து உடனடியாக சேர்க்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- இதனால் பள்ளிக்கு நேரில் பல முறை வர வேண்டிய அவசியம் இல்லை. தொழிலாளர்கள் மற் றும் தினக்கூலி வேலைக்குச் செல்லும் பெற்றோர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
வரலாறு மற்றும் பண்பாடு
சிவகங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 13-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு
- சூழல்: சிவகங்கை மாவட்டத்தில், 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டைத் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இக்கல்வெட்டு, ஒரு போர்வீரருக்கும் ஒரு வணிகருக்கும் இடையிலான ஒரு நிகழ்வைப் பதிவு செய்துள்ளதுடன், இடைக்காலத் தமிழ்ச் சமூகத்தில் நிலவிய வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் சமூக ஆதரவு நடைமுறைகள் குறித்த அரிய தகவல்களையும் வழங்குகிறது.
- சிவகாங்கைக்கு அருகிலுள்ள சோழபுரம் பகுதியில் இக்கல்வெட்டு கண்டறியப்பட்டது.
சிவகாங்கை கல்வெட்டு பற்றிய விவரங்கள்
-
- இக்கல்வெட்டு, அரிதாகக் காணப்படும் “ஆசிரியம்” எனும் வகையைச் சேர்ந்ததாகும்.
- இடைக்காலக் கல்வெட்டுகளில் பொதுவாகக் காணப்படும் நிலக்கொடைகள் அல்லது கோயில் மானியங்கள் பற்றிய பதிவுகளுக்கு மாறாக, இவ்வகைக் கல்வெட்டுகள் பாதுகாப்பு, உதவி மற்றும் ஆதரவு ஆகியவற்றுடன் தொடர்புடையவையாக உள்ளன.
- இக்கல்வெட்டுக் கல் சுமார் மூன்று அடி உயரமும், 1.25 அடி அகலமும் கொண்டது; இது நீர்த்தேக்கத்தின் உட்பகுதியில் அமைந்துள்ள ஒரு மதகுத் தூணிற்கு அருகில் நிறுவப்பட்டுள்ளது.
- கல்வெட்டின் மேற்பகுதியில், ஒரு காலைத் தூக்கிய நிலையில் நிற்கும் புலியின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.
- கல்வெட்டின் வாசகம் “ஸ்வஸ்தி ஸ்ரீ” எனும் மங்கலச் சொல்லுடன் தொடங்குகிறது; இதன் இறுதியில், இருபுறமும் இரண்டு பாரம்பரிய விளக்குகள் சூழ, வில் மற்றும் அம்பு ஆகியவற்றின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
- வணிகர்களுடன் தொடர்புடைய “எட்டி” எனும் பட்டத்தைப் பெற்றிருந்த ‘எரியன்’ என்பார், ‘புலிக்குட்டி வீரன்’ என அடையாளம் காணப்பட்ட ஒரு போர்வீரருக்கு ‘ஆசிரியம்’ ஒன்றை வழங்கியதாக இக்கல்வெட்டு பதிவு செய்துள்ளது.
- “எட்டி” எனும் சொல் வணிகர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு பட்டப்பெயராகும்; பண்டையத் தமிழ் காப்பியமான ‘சிலப்பதிகாரத்திலும்’ இச்சொல் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இக்கிராமத்தில் முன்னரே கண்டறியப்பட்ட, மாறவர்மன் சுந்தரபாண்டியனின் காலத்தைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு, இவ்வூரை ‘முடிகொண்ட சோழபுரம்’ எனக் குறிப்பிடுகிறது; அதேவேளையில், தற்போது புதிதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ள இக்கல்வெட்டு இவ்வூரை ‘செயங்கொண்ட சோழபுரம்’ எனச் சுட்டிக்காட்டுகிறது.
- கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்களின் பாணியை அடிப்படையாகக் கொண்டு, ஆய்வாளர்கள் இக்கல்வெட்டை 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் காலக்கணிப்பு செய்துள்ளனர்.

