அறிவியல்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் சமீபத்திய கண்டுபிடிப்புகள்

இந்திய விஞ்ஞானிகளால் கார்பன் இல்லாத பெரோசின் அனலாக் உருவாக்கம்

  • பின்னணி:  சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Madras) மற்றும் இந்திய அறிவியல் கழகம் (IISc) ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பெரோசினின் முதலாவது நிலையான, கார்பன் இல்லாத அனலாக் (ஒத்த வடிவமைப்பு கொண்ட சேர்மம்) அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

பெரோசின் பற்றி 

  • பெரோசின் என்பது 70 ஆண்டுகளுக்கும் முன்பு கண்டறியப்பட்ட ஒரு புகழ்பெற்ற கரிம உலோகச் சேர்மம் ஆகும்.
  • இதன் கண்டுபிடிப்பு, கரிம உலோக வேதியியலின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இது பின்வரும் துறைகளில் பயன்படுத்தப்படுகிறது: பொருள் அறிவியல் ,வினையூக்கம், மருத்துவம்.
  • இது பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது:
  • இரும்பு அணு 
  • இரண்டு தட்டையான கார்பன் வளையங்களுக்கு இடையே சாண்ட்விச்) செய்யப்பட்டது போல் இது அமைந்திருக்கும்.

முக்கிய திருப்புமுனை

  • விஞ்ஞானிகள் கார்பன் வளையங்களுக்குப் பதிலாக வெற்றிகரமாக போரான் வளையங்களை (Boron rings) மாற்றியமைத்துள்ளனர்.

இந்த புதிய சேர்மம் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது

  • போரான் அடிப்படையிலான வளையங்கள்
  • மையப்பகுதியில் ஒரு ஆஸ்மியம் (Osmium) அணு
  • இது இதனை முற்றிலும் ஒரு கனிம “சாண்ட்விச்” சேர்மமாக மாற்றுகிறது.

போரான் மற்றும் ஆஸ்மியத்தின் பங்கு

  • போரான் வேதியியல் ரீதியாக கார்பனைப் போன்றது மற்றும் வளையக் கட்டமைப்புகளை உருவாக்கும் திறன் கொண்டது.
  • போரான் சாண்ட்விச் கட்டமைப்பை நிலைநிறுத்துவதற்கு ஆஸ்மியம் சிறந்த உலோகம் என்பதை கணினி மாதிரியாக்கம் கண்டறிந்துள்ளது.
    நடப்பு தகவல்கள்


    திருக்குறள் (520)

    நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் 

    கோடாமை கோடாது உலகு

    விளக்கம்:  தன் கீழ் வேலை செய்யும் ஊழியர்களின் நடத்தையை அரசன் நாள்தோறும் ஆராய வேண்டும். அவர்கள் நேர்மை தவறாமல் நடந்துகொண்டால், உலகமும் நேர்மை தவறாமல் நடக்கும்.

    பயன்படுத்தப்பட்ட முறை

    ஆராய்ச்சியாளர்கள் பின்வருவனவற்றை வினைபுரியச் செய்தனர்

    • ஒரு பாலிமெரிக் ஆஸ்மியம்-புரோமின் முன்னோடி 
    • போரேன்-டைமெத்தில் சல்பைடு வினையாக்கியுடன்  சேர்க்கப்பட்டது.
    • இந்த கலவையானது 100°C வெப்பநிலையில் எட்டு மணி நேரம் சூடாக்கப்பட்டது.
    • இறுதி தயாரிப்பு நிறமற்ற திடப்பொருளாகப் பிரித்தெடுக்கப்பட்டது.

    இந்த கண்டுபிடிப்பின் முக்கியத்துவம்

    ஹைட்ரஜன் பாலங்கள் உலோகத்துடனான பிணைப்பை வலுப்படுத்துகின்றன.

    இந்த சேர்மம் பின்வருவனவற்றை உருவாக்க உதவக்கூடும்:

    • அதிக வெப்பநிலையிலும் நிலையான வினையூக்கிகள் 
    • மேம்பட்ட கனிம பொருட்கள் 
    • சாண்ட்விச் கட்டமைப்புகள் என்பது கார்பன் அடிப்படையிலான வேதியியலுக்கு மட்டும் வரம்பிடப்பட்டவை அல்ல என்பதை இக்கண்டுபிடிப்பு நிரூபிக்கிறது.

     

Next அறிவியல் >