சர்வதேச செவிலியர் தினம்
-
- சர்வதேச செவிலியர் தினம் ஆண்டுதோறும் மே 12 அன்று அனுசரிக்கப்படுகிறது, இது புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளாகும்.
- 2026 ஆம் ஆண்டு சர்வதேச செவிலியர் தினத்திற்கான அதிகாரப்பூர்வ கருப்பொருள் ‘நமது செவிலியர்கள்,நமது எதிர்காலம், வலுவூட்டப்பட்ட செவிலியர்கள் உயிர்களைக் காப்பாற்றுகிறார்கள்’ என்பதாகும்.
- குடியரசுத் தலைவர் இன்று ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற ஒரு விழாவில் பதினைந்து செவிலியர் நிபுணர்களுக்கு தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் 2026-ஐ வழங்கினார்.
- செவிலியர் துறையில் அவர்களின் சிறந்த பங்களிப்பிற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
- இந்த மதிப்புமிக்க விருதுகள் மத்திய மற்றும் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளில் பணியாற்றும் பதிவு பெற்ற செவிலியர்கள், மருத்துவச்சிகள், துணை செவிலியர் மருத்துவச்சிகள் மற்றும் பெண் சுகாதாரப் பார்வையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.
மனநலம் குறித்த விழிப்புணர்வு வாரம்
- 2026-ஆம் ஆண்டிற்கான மனநலம் குறித்த விழிப்புணர்வு வாரம், “நடவடிக்கை” (Action) எனும் கருப்பொருளுடன் மே 11 முதல் 17 வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

