இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்த விரிவாக்கம்
- பின்னணி : பிரேஸில் உள்பட மேலும் 12 நாடுகள் மற்றும் கூட்டமைப்புகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் தயாராகி வருவதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், ஐரோப்பிய யூனியன், நான்கு ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய தடையற்ற வர்த்தக கூட்டமைப்பு, ஆஸ்திரேலியா, மோரீஷஸ், ஓமன், நியூஸிலாந்து ஆகிய நாடுகளுடன் இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளது.
- கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஏப்ரல் மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் நாட்டின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மேற்காசியப் போரால் உருவான சவால்களுக்கிடையிலும் இந்த வளர்ச்சி பதிவாகியுள்ளது.
- சிலி, பெரு, இஸ்ரேல், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில், கனடா, தென்னாப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை பிராந்தியங்கள், பிரேஸில் மற்றும் அதன் அண்டை நாடுகள், ரஷியா ஆகியவற்றுடன் இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மேலும் 12 ஒப்பந்தங்கள் தயாராகி வருகின்றன.

