விளையாட்டு

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில்

  • பின்னணி : ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) சீர்திருத்தத்தில் புதிய நிரந்தர உறுப்பினர்களுக்கு “வீட்டோ” அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பற்றி 

  • ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் 1945-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் நியூயார்க்கில் அமைந்துள்ளது. 
  • இதில் மொத்தம் 15 உறுப்பினர்கள் உள்ளனர். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய 5 நாடுகள் ‘வீட்டோ’ (Veto) அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். மீதமுள்ள 10 தற்காலிக உறுப்பினர்கள், புவியியல் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் ஐ.நா. பொதுச் சபையால் இரண்டு ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 
  • இந்தியா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் நீண்ட காலமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவி பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன.
  • 1960 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே ஒரு முறை மட்டுமே பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் செய்யப்பட்டு, அதில் தற்காலிக உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 இலிருந்து 10 ஆக அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்

  • அமைதிக்கு அச்சுறுத்தல், அமைதி மீறல் அல்லது ஆக்கிரமிப்புச் செயல்கள் நிலவுகிறதா என்பதைத் தீர்மானித்தல்.
  • ஐநா உறுப்பு நாடுகளின் மீது கட்டாயத் தீர்மானங்களை பிறப்பித்தல் (மற்ற ஐநா அமைப்புகளின் பரிந்துரைகள் பெரும்பாலும் கட்டாயமற்றவை, ஆனால் பாதுகாப்புச் சபையின் முடிவுகள் சட்டப்படி கட்டுப்படுத்தக்கூடியவை).
  • குறிப்பிட்ட நாடுகளின் மீது பொருளாதாரத் தடைகள் மற்றும் ஆயுதத் தடைகளை  விதித்தல்.
  • அமைதிப்படை குழுக்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம் அளித்தல்.
  • ஐக்கிய நாடுகள் சபையில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்குப் பரிந்துரை செய்தல்.
  • ஐநா பொதுச் செயலாளரை நியமிக்கப் பரிந்துரைத்தல்.
  • சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பான வழக்குகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) மாற்றுதல் அல்லது பரிந்துரைத்தல்.

 

நடப்பு தகவல்கள்

 

  • தொகுதி மறுவரையறை திருத்தங்கள்
  • 42வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 1976: மக்களவையில் மாநிலங்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் ஒவ்வொரு மாநிலத்தையும் பிரதேசத் தொகுதிகளாகப் பிரித்தல் ஆகியவற்றை, 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், 2000-ஆம் ஆண்டு வரை மாற்றமில்லாமல் முடக்கியது.
  • 84வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 2001: இந்த முடக்கத்தை 2026-ஆம் ஆண்டு வரை நீட்டித்தது. மேலும், 1991-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைக்க அதிகாரம் அளித்தது.
  • 87வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 2003: மக்களவையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையை மாற்றாமல், 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய அனுமதித்தது.
Next விளையாட்டு >