கீழ் கோபிலி நீர்மின் திட்டம்
- பின்னணி : பிரதமர் சமீபத்தில், 120 மெகாவாட் திறன் கொண்ட கீழ் கோபிலி நீர்மின் திட்டத்தை காணொளி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
கீழ் கோப்பிலி நீர்மின் திட்டம் (Lower Kopili Hydropower Project)
- அசாமின் கோப்பிலி ஆற்றுப் படுகையில் 120 மெகாவாட் (MW) திறன் கொண்ட ‘ரன்-ஆஃப்-ரிவர்’ (ஆற்று நீர் ஓட்டத்தைப் பயன்படுத்தும்) நீர்மின் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
- இது மேற்கு கர்பி ஆங்லாங் (West Karbi Anglong) மற்றும் திமா ஹாசாவ் (வடக்கு கச்சார் மலைகள்) ஆகிய மாவட்டக் குழுப் பகுதிகளில் அமைந்துள்ளது.
- இத்திட்டம் அசாம் மின் உற்பத்தி கழகத்தால் (Assam Power Generation Corporation Limited) உருவாக்கப்பட்டு அதன் கீழ் இயங்குகிறது.
- அசாம் மின் துறை முதலீட்டுத் திட்டத்தின் கீழ், ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank) இத்திட்டத்திற்கு நிதி வழங்குகிறது.
நடப்பு தகவல்கள்
- கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பீச்சி-வாழானி வனவிலங்கு சரணாலயத்தின் (Peechi-Vazhani Wildlife Sanctuary) வாழானி அணைப் பகுதியில், ஆராய்ச்சியாளர்கள் ‘டிராவிட வாழானியா’ (Drawida vazhania) என்ற புதிய மண்புழு இனத்தைக் கண்டறிந்துள்ளனர்.
கோப்பிலி ஆறு (Kopili River)-
- கோப்பிலி ஆறு மேகாலயா மற்றும் அசாம் மாநிலங்கள் வழியாக பாயும் ஆறாகும்.
- இது அசாமில் பிரம்மபுத்திரா ஆற்றின் தென்கரைத் துணை ஆறுகளில் மிகப்பெரியது ஆகும்.
- இது மேகாலயா பீடபூமியில் (Meghalaya Plateau) உற்பத்தியாகி, கர்பி ஆங்லாங் மற்றும் நகாவ்ன் மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து பிரம்மபுத்திரா ஆற்றுடன் இணைகிறது.
- இதன் மொத்த நீளம் 256 கி.மீ. ஆகும் (இதில் 78 கி.மீ. மேகாலயா–அசாம் எல்லையாகவும், மீதமுள்ள 178 கி.மீ. அசாம் மாநிலத்திற்குள்ளும் அமைகிறது).
-
- கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பீச்சி-வாழானி வனவிலங்கு சரணாலயத்தின் (Peechi-Vazhani Wildlife Sanctuary) வாழானி அணைப் பகுதியில், ஆராய்ச்சியாளர்கள் ‘டிராவிட வாழானியா’ (Drawida vazhania) என்ற புதிய மண்புழு இனத்தைக் கண்டறிந்துள்ளனர்.

