முன்முயற்சிகள் /திட்டங்கள்
உடன்குடி அணல் மின் நிலையம்
- பின்னணி : தமிழ்நாடு முதலமைச்சர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ரூ.1,3077 கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய அணல் மின் நிலையத்தை தொடங்கி வைத்தார்.
- இந்த மின் நிலையம் தலா 660 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகள் உடையது.
- இது மிக உயரழுத்த (சூப்பர் கிரிட்டிக்கல்) தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட உயர் திறன் கொண்ட அனல் மின் நிலையமாகும்.
- மின் நிலையத்திற்கு நிலக்கரி கொண்டு வர கரையிலிருந்து 9 கி.மீ தொலைவில் நடுக்கடலில் கப்பல் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
- ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்திக்கு குறைந்த அளவு நிலக்கரி தேவைப்படுவதால் கார்பன் டைஆக்சைடு உமிழ்வு 25–30% வரை குறைகிறது.
- இந்த திட்டம் மூலம் மாநிலத்தின் மின் உற்பத்தித் திறன் அதிகரித்து வெளிச்சந்தையில் மின் கொள்முதல் குறையும்.
TNSCST – ICMR புரிந்துணர்வு ஒப்பந்தம்
-
- பின்னணி : கல்வி, உயிரி-தொழில்துறையில் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள், அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு போன்றவற்றில் பலப்படுத்துதல் தொடர்பாக, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் (TNSCST) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திட்டன.
- இந்த ஒப்பந்தம் மருத்துவ ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property) பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக செய்யப்பட்டது.
- கல்வி நிறுவனங்களில் உருவாகும் உயிரி-மருத்துவ கண்டுபிடிப்புகளை பாதுகாக்கவும் தொழில்நுட்ப பரிமாற்றத்தை மேம்படுத்தவும் இது உதவும்.
- தமிழ்நாடு அதிக காப்புரிமை விண்ணப்பங்கள் தாக்கல் செய்த மாநிலமாக முன்னிலை பெற்றுள்ளது.
- இந்த ஒப்பந்தம் நீதி ஆயோக் (NITI Aayog) வழிகாட்டுதலின் கீழ் டெல்லியில் கையெழுத்திடப்பட்டது.
- தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் 1984-ம் ஆண்டு தன்னாட்சி பெற்ற நிறுவனமாக தமிழக அரசால் நிறுவப்பட்டது.
நடப்பு தகவல்கள்
- 2021-26 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் தாய் இறப்பு விகிதம் ஒரு லட்சம் உயிருள்ள பிறப்புகளுக்கு 35 ஆக உள்ளது.
- திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 2019
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR)- இது 1911-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட உலகின் பழமையான மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாகும்.
- இது இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள சுகாதார ஆராய்ச்சித் துறையின் மூலம் நிதியைப் பெறுகிறது.
- இந்தியாவில் உயிரி மருத்துவ ஆராய்ச்சியை வழிநடத்துவதிலும், ஒருங்கிணைப்பதிலும் மற்றும் மேம்படுத்துவதிலும் ICMR முக்கியப் பங்கு வகிக்கிறது.
தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் 3 சிறப்பு இணையப் பக்கங்கள் வெளியீடு
- பின்னணி : தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் எண்ம சேவைகள் துறை அமைச்சர் மூன்று புதிய இணையப் பக்கங்களை தொடங்கி வைத்தார்.
- தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் “தமிழில் பெயர்கள்”, “நாட்டுடைமை நூல்கள்”, “தமிழ்நாடு பண்பாட்டு மின் நிலவரை ஏடு” என்ற இணையப் பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
- இந்த இணையப் பக்கங்கள் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
- “தமிழில் பெயர்கள்” பக்கத்தில் குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள் மற்றும் அவற்றின் விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
- “நாட்டுடைமை நூல்கள்” பக்கத்தில் 1963–2025 வரை நாட்டுடைமையாக்கப்பட்ட ஆசிரியர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் நூல்கள் இடம்பெற்றுள்ளன.
- “தமிழ்நாடு பண்பாட்டு மின் நிலவரை எடு” பக்கத்தில் கோவில்கள், தொல்லியல் தளங்கள், வரலாற்று நினைவுச் சின்னங்கள் பற்றிய தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
- முதல் கட்டமாக மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை, தேனி மாவட்டங்களின் தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழ் இணையக் கல்விக் கழகம்
- இது தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின் கீழ் தமிழ் இணையப் பல்கலைக்கழகமாக நிறுவப்பட்டது.
- தமிழ் இணையப் பல்கலைக்கழகமானது தமிழ் இணையக் கல்விக்கழகமாக 2010 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் நாள் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
நடப்பு தகவல்கள்
- இந்திய அரசியலமைப்பின் 106-வது சட்டத்திருத்தத்தின் (2023) மூலம், மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் “நாரி சக்தி வந்தன் அதினியம்” என்று அழைக்கப்படுகிறது.

