தமிழ்நாடு நிகழ்வுகள்

முன்முயற்சிகள் /திட்டங்கள் 

தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் முக்கிய மேம்பாட்டு முன்னெடுப்புகள்

  • சூழல்: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) துறையால் வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தை (TWEES) முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் பெண்கள் தொழில்முனைவோராக உருவாவதை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
    நடப்பு தகவல்கள்


    • அவசர காலங்களில் 108 ஆம்புலன்ஸை முன்பதிவு செய்வதற்காக தமிழ்நாடு அரசு புதிய வாட்ஸ்அப் சேவையைத் தொடங்கியுள்ளது.
    • சுங்குடி சேலைகள் பாரம்பரிய பருத்தி சேலைகளாகும். 17-ஆம் நூற்றாண்டில் குஜராத்திலிருந்து மதுரைக்கு குடிபெயர்ந்த சௌராஷ்டிர சமூகத்தினரால் இவை செம்மைப்படுத்தப்பட்டன. மதுரை சுங்குடி சேலைக்கு 2005-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
    • தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்
      • இது பெண்கள் மற்றும் திருநங்கை தொழில்முனைவோருக்கான திட்டம், குறிப்பாக பொருளாதார மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய பின்னணியில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
      • விண்ணப்பதாரர்கள் 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். இத்திட்டத்திற்குகுறைந்தபட்ச கல்வித் தகுதி தேவையில்லை.
      • உற்பத்தி / வணிகம் / சேவை சார்ந்த திட்டங்களுக்கு, அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன் பெற்று பெண்கள் தொழில் தொடங்கலாம்.
      • தனிநபர் அடிப்படையிலான மூலதன மானியம்  திட்ட மதிப்பீட்டில் 25% (அதிகபட்சம் ரூ.2.00 லட்சம்).
      • தமிழ்நாட்டின் குடியிருப்பாளராக இருக்க வேண்டும். வருமான உச்சவரம்பு ஏதுமில்லை.
      • கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன் பெற்ற பெண்கள், தங்கள் தொழிலை விரிவாக்கம் செய்ய கடன் பெற விரும்பினால், இத்திட்டத்தின் கீழ் கூடுதல் தொகையைப் பெறலாம்.

      தமிழகத்தில் நலத்திட்டங்கள், பாதுகாப்பு மற்றும் கலாச்சார முன்னெடுப்புகள்:

      • தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் மூலம் கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் முதியவர்களுக்கான நல மையங்களை முதலமைச்சர் காணொளி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
      • திருச்சிராப்பள்ளி மற்றும் தூத்துக்குடி ஆகிய நகரங்களுக்கான ‘மாஸ்டர் பிளான் 2045’ (Master Plan 2045) திட்ட அறிக்கைகளை முதலமைச்சர் வெளியிட்டார்.
      • கடலூர் மாவட்டம் பிச்சாவரத்தில் சதுப்புநிலக் காடுகள் பாதுகாப்பு மையம், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் ‘தமிழ்நாடு நிலையான கடல் வளங்கள் மற்றும் நீலப் பொருளாதாரம்’ திட்டத்தின் கீழ் சர்வதேச புலம்பெயர் பறவைகள் மையம் மற்றும் கோயம்புத்தூரில் நீலகிரி வரையாடு பாதுகாப்பு மையம் ஆகியவற்றுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
      • மறைந்த கால்நடை மருத்துவர் வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தியின் புதல்வருக்கு, டாக்டர் ஏ.ஜே.டி. ஜான்சிங் வனவிலங்கு பாதுகாப்பு விருதினை முதலமைச்சர் வழங்கினார்.
      • பெரியார்வாதி  வே. ஆனைமுத்து மற்றும் எழுத்தாளர் ஈரோடு தமிழன்பன் ஆகியோரின் படைப்புகளை தமிழ்நாடு அரசு நாட்டுடைமையாக்கியது.
      • பி.ஆர். அம்பேத்கரின் 73 படைப்புகளை மராத்திய மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட தொகுப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார்.
        நடப்பு தகவல்கள்

        • 1895-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், சென்னையின் முதல் டிராம் சேவை எழும்பூர் மின் உற்பத்தி நிலையத்திற்கும் பச்சையப்பன் கல்லூரிக்கும் இடையே தொடங்கியது. இரண்டு சிறிய நிறுத்தங்களைக் கொண்டு, 12 நிமிடங்களில் இந்த பயணம் நிறைவடைந்தது. 1921-க்குள், 24 கி.மீ தண்டவாளத்தில் 97 டிராம் கார்கள் இயங்கின. சென்னை டிராம்வே நிறுவனம் ஏப்ரல் 1953-ல் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது.
        • கனவு இல்லத் திட்டம்
          • பின்னணி: கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மூன்று எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய் பிரிவு குடியிருப்புகள் வழங்கப்பட்டன.
          • வீடு வழங்கப்பட்ட எழுத்தாளர்கள்:
          • செம்மொழித் தமிழ் விருது பெற்ற தாயம்மாள் அறவாணன்
          • 1994ல் புதிய தரிசனங்கள் என்ற புதினத்திற்காக  சாகித்திய அகாதெமி விருது பெற்ற பொன்னீலன்
          • 2024 ஆம் ஆண்டு திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908” நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆ.இரா. வேங்கடாசலபதி

          கனவு இல்லத் திட்டம்

          • தமிழக அரசின் கனவு இல்லத் திட்டம் 2021-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
          • தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாதமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படுவதே கனவு இல்லத் திட்டமாகும்.

          இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கத் தகுதியுடையோர்

          • சாகித்திய அகாதெமி விருது
          • ஞானபீட விருது பெறும் தமிழ் எழுத்தாளர்கள்
          • செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வாயிலாக வழங்கப்படும் 
          • தொல்காப்பியர் விருது 
          • கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது
          • நோபல் பரிசு ஆகிய விருதுகளைப் பெற்ற, பெறும் தமிழ் எழுத்தாளர்களாவர்.
            நடப்பு தகவல்கள்


            • மத்திய உள்துறை அமைச்சர், வரவிருக்கும் 2027-ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக ‘பிரகதி’ மற்றும் ‘விகாஸ்’ ஆகிய இரண்டு சின்னங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இதுவே முதன்முறையாக டிஜிட்டல் முறையில் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பாகும். மேலும், மக்கள் தாங்களாகவே கணக்கெடுப்பில் பங்கேற்கும் ‘சுய-கணக்கெடுப்பு’ மற்றும் சாதி வாரியான கணக்கெடுப்பு முறை இதில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
              அரசியலமைப்பு 

              மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் புதிய ஆளுநர் நியமனங்கள்

              • சூழல்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, மேற்கு வங்காளத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழ்நாட்டின் ஆளுநராக கூடுதல் பொறுப்பினை ஏற்பார் என்று குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார்.

              ஆளுநர் பற்றிய தகவல்கள்:

              • 1956-ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் 7-வது திருத்தம், ஒரே நபரை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்க அனுமதிக்கிறது.
              • அரசியலமைப்பின் 155-வது சரத்தின் கீழ் ஆளுநர் நியமிக்கப்படுகிறார்.
              • அவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
              • அவருக்குக் குறைந்தபட்சம் 35 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
              • ஆளுநர் நாடாளுமன்றத்திலோ அல்லது எந்தவொரு மாநில சட்டமன்றத்திலோ உறுப்பினராக இருக்கக்கூடாது.
              • இந்திய அரசியலமைப்பின் 153-வது சரத்து: ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருக்க வேண்டும். இருப்பினும், இந்த பிரிவில் உள்ள எதுவும், ஒரே நபரை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிப்பதைத் தடுக்காது.

              சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி அரவிந்த் தர்மாதிகாரி

              • பின்னணி : நீதிபதி அரவிந்த் தர்மாதிகாரி சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
              • இந்தியாவில்  உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் நியமனம், இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 217-ஆல் நிர்வகிக்கப்படுகிறது.

              உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பற்றி

                • இந்திய உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, அரசியலமைப்பின் 217வது சரத்தின் கீழ் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்.
                • அவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
              • அவர் இந்தியாவில் குறைந்தது 10 ஆண்டுகள் நீதித்துறைப் பதவியில் பணியாற்றியிருக்க வேண்டும்.
              • பணிக்காலம்: 62 வயது வரை அந்தப் பதவியில் நீடிப்பார்.
              • இந்த நியமனத்தின் போது குடியரசுத் தலைவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் ஆளுநர் ஆகிய இருவரிடமும் கலந்தாலோசனை மேற்கொள்வார்.
              • பதவி விலகல்: ஒரு நீதிபதி தானாக முன்வந்து பதவி விலக விரும்பினால், அவர் தனது ராஜினாமா கடிதத்தை இந்தியக் குடியரசுத் தலைவரிடம் வழங்க வேண்டும்.
              • உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டாலோ அல்லது வேறொரு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டாலோ, அவரது பதவி தானாகவே முடிவுக்கு வரும்.
Next தமிழ்நாடு நிகழ்வுகள் >