தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்
- திலோத்தமா சென் தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3-நிலை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்
- மேக்னஸ் கார்ல்சன் மற்றும் அலெக்ஸாண்ட்ரா கோரியாச்கினா ஆகியோர் உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றியாளர்களாக உருவெடுத்தனர்.
- இந்தியா சார்பில், அர்ஜுன் எரிகைசி மற்றும் கோனேரு ஹம்பி ஆகியோர் முறையே ஓபன் மற்றும் பெண்கள் பிரிவுகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
- உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் கத்தாரில் நடைபெற்றது.
மூத்தோர் தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்
- விஜயவாடாவில் நடைபெற்ற 87வது மூத்தோர் தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சூர்யா கரிஷ்மா தமிரி பெண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.
- ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில், “ரித்விக் சஞ்சீவி எஸ்” சாம்பியன் ஆனார்.
- ஆண்கள் இரட்டையர் பட்டத்தை “ஏ. ஹரிஹரன்” மற்றும் “ரூபன் குமார்” வென்றனர்.
உலக பேட்மிண்டன் விளையாட்டு வீரர்களுக்கான கூட்டமைப்பு
- இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற “பி. வி. சிந்து” உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு விளையாட்டு வீரர்களின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- BWF என்பது உலக அளவில் பேட்மிண்டனுக்கான அமைப்பாகும்.
- பி.வி. சிந்து 2016-ல் ஒலிம்பிக் வெள்ளியும், 2020-ல் வெண்கலமும் வென்றார்.

