அறிவியல்

பொது அறிவியல்

இந்தியாவில் ரேபீஸ் நோய்

  • உலகளவில் ஆண்டுதோறும் ஏற்படும் 59,000 ரேபிஸ் இறப்புகளில் சுமார் 20,000 இறப்புகள் இந்தியாவில் நிகழ்கின்றன.
  • முக்கிய ஆதாரம்: தெருநாய்கள்; ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 மில்லியன் நாய் கடி சம்பவங்கள் பதிவாகின்றன.
  • நாய் இனப்பெருக்கக் கட்டுப்பாடு: நாய்களைப் பிடித்து, கருத்தடை செய்து, தடுப்பூசி போட்டு, மீண்டும் விடுவிக்கும் முறை (CNVR) அதிக நாய் இனப்பெருக்க விகிதம் (~40%) காரணமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ரேபீஸ்

  • காரணம்: மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் ரேபிஸ் வைரஸ் (லைசாவைரஸ், ராப்டோவிரிடே).
  • இறப்பு விகிதம்: நோய்க்கான அறிகுறிகள் தோன்றியவுடன் 100%.
  • பரவும் முறை: முக்கியமாக நாய் கடி மூலம்.
  • தடுப்பு முறை: நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு வழங்கப்படும் தடுப்பு சிகிச்சை (PEP) மூலம் 100% தடுக்கக்கூடியது
  • காயத்தைக் கழுவுதல், முழுமையான ரேபிஸ் தடுப்பூசித் தொடர், கடுமையான கடிக்கு RIG/மோனோகுளோனல் ஆன்டிபாடிகள்.
  • உலகளாவிய இலக்கு: உலக சுகாதார நிறுவனம், ஒருமித்த சுகாதார அணுகுமுறையைப் பயன்படுத்தி, 2030-ஆம் ஆண்டிற்குள் நாய்கள் மூலம் பரவும் வெறிநாய்க்கடியால் ஏற்படும் மனித இறப்புகளை முடிவுக்குக் கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளது.

ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான இந்தியாவின் நடவடிக்கைகள்:

  • தேசிய ரேபிஸ்  நோய் கட்டுப்பாட்டுத் திட்டம் (NRCP) 2012 – 2017
  • ஒருங்கிணைந்த சுகாதாரத் தகவல் தளம் (IHIP) 2019
  • தேசிய சுகாதார இயக்கம் (NHM) 2013

ஆபத்தான கொசு இனங்கள் இந்தியாவின் 2030 ஆம் ஆண்டு மலேரியா ஒழிப்பு இலக்கிற்கு அச்சுறுத்தலாக உள்ளன.

  • ஆக்கிரமிப்புத் தன்மையுடைய அனோபிலிஸ் ஸ்டீபன்சி கொசுவின் பரவலால், நகர்ப்புற மலேரியா ஒரு தேசியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
  • 2030-ஆம் ஆண்டுக்குள் மலேரியாவை ஒழிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • உலக சுகாதார அமைப்பின் உத்திக்கு இணங்க, 2027-ஆம் ஆண்டுக்குள் உள்நாட்டு மலேரியா பாதிப்புகள் இல்லாத நிலையை அடைவது ஒரு இடைக்கால இலக்காகும்.
  • மலேரியா பாதிப்புகள் 2015-ல் 11.7 லட்சத்திலிருந்து 2024-ல் 2.27 லட்சமாகக் குறைந்துள்ளன.
  • இதே காலகட்டத்தில் இறப்புகள் 78% குறைந்துள்ளன.
  • இந்தியா பெருமளவில் மலேரியாவை ஒழிப்பதற்கு முந்தைய கட்டத்தை எட்டியுள்ளது.

அனோபிலிஸ் ஸ்டீபன்சி

  • நகர்ப்புற சூழல்களில் செழித்து வளரக்கூடியது மற்றும் தண்ணீர் தொட்டிகள் மற்றும் டயர்கள் போன்ற செயற்கை கொள்கலன்களில் இனப்பெருக்கம் செய்கிறது.
  • பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரம் மற்றும் பி. விவாக்ஸை திறம்பட பரப்புகிறது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சமிபத்திய கண்டுபிடிப்புகள் 

பரம் ருத்ரா  மீத்திறன் கணினி (Super Computer)

  • பீகாரின் முதல் ‘பரம் ருத்ரா’ சூப்பர்கணினி, இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) பட்னாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் நோக்கம், உள்நாட்டிலேயே உயர் செயல்திறன் கொண்ட கணினித் திறன்களை உருவாக்குவதாகும்.
  • கிழக்கு இந்தியாவில் மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் உயர் செயல்திறன் கணினித் திறனை வலுப்படுத்துகிறது
  • மீக்கணினித் திறன் பெட்டாஃப்ளாப்ஸ் அலகில் அளவிடப்படுகிறது.
  • மொத்தத் திறன்: சுமார் 39 பீட்டாஃப்ளாப்ஸ்
  • தேசிய மீக்கணினித் திட்டத்திற்கான அமைச்சகம் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகும்.

இந்திய மீத்திறன் கணினி 

AIRAWAT – PSAI 

PARAM – Siddhi AI

Pratyush (Cray XC40)

Mihir (Cray XC40)

 

Next Current Affairs அறிவியல் >