தமிழ்நாடு நிகழ்வுகள்

முன்முயற்சி / திட்டங்கள்

தமிழ்நாடு விளையாட்டு தடகள மேலாண்மை அமைப்பு

  • தமிழ்நாடு துணை முதல்வர் சென்னையில் உள்ள டாஜ் கொரோமாண்டலில் நடைபெற்ற TASCON 2.0 (தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0) நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு தடகள மேலாண்மை அமைப்பை தொடங்கி வைத்தார்.
  • இது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்  வீரர்களுக்கான செயல்திறன் கண்காணிப்புப் பயனுள்ள எண்ம தளம் ஆகும்.
  • இந்த தளம் ஆரோக்கிய கேள்வித்தாள், பயிற்சி அட்டவணை, உடற்பயிற்சி சுமை தரவு சேகரிப்பு, காயம் அறிக்கை மற்றும் நீரேற்ற கண்காணிப்பு போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும்.
  • முதன்முறையாக, மாநில அரசு பயிற்சி, நல்வாழ்வு, செயல்திறன் மற்றும் மருத்துவத் தகவல்களை ஒரு ஒற்றை, அறிவார்ந்த எண்ம தளத்தில் ஒன்றிணைக்கிறது.

பொருளாதாரம் 

ரிசர்வ் வங்கியின் தமிழ்நாடு விவசாயம் குறித்த ஆய்வு

  • விவசாயம் என்பது தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் குறைவான இடத்தைப் பிடித்துள்ளது. 
  • இந்திய மாநிலங்கள் குறித்த ரிசர்வ் வங்கியின் சமீபத்திய புள்ளிவிவரக் கையேட்டைப் பகுப்பாய்வு செய்ததன் படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் (2023-24 மற்றும் 2024-25) இந்தத் துறை எதிர்மறை வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளது.
  • மொத்த உணவு தானியங்களில் அரிசி முதன்மைப் பங்காக உள்ளது; சிறுதானியங்கள் உட்பட இதர தானியங்கள் அடுத்த இடத்தில் உள்ளன; பயறு வகைகள் மிகக் குறைந்த பங்களிப்பை அளிக்கின்றன.
Next Current Affairs தமிழ்நாடு நிகழ்வுகள் >