ஆசியா பவர் குறியீடு
- ஆசியா பவர் குறியீடு என்பது நாடுகளின் வெளிப்புறச் சூழலை வடிவமைக்கும் மற்றும் அதற்குப் பதிலளிக்கும் திறனை அளவிடும் ஒரு வருடாந்திர மதிப்பீடு ஆகும். மேலும் இது ஆசியாவில் உள்ள நாடுகளின் அதிகார இயக்கவியலை மதிப்பிடுகிறது.
- இது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிந்தனைக் குழுவான லோவி நிறுவனம் மூலம் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.
- இந்தியா 100-க்கு 40.0 புள்ளிகளைப் பெற்று, மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், இது முதல் முறையாக “முக்கிய சக்தி” (major power) என்ற நிலைக்குரிய தடையைத் தாண்டியுள்ளது.
- பொருளாதாரத் திறன் மற்றும் எதிர்கால வளங்கள் ஆகிய இரண்டு அளவுகோல்களில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
- இந்தியாவின் பலவீனமான பகுதி தற்காப்பு வலையமைப்புகள் (ஆகும். இதில் இந்தியா 11-வது இடத்தில் உள்ளது

