ஆப்ரேஷன் சாகர் பந்து
-
- சைப்ளோன் திட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக இந்தியா “ஆப்பரேஷன் சாகர் பந்து” என்ற திட்டத்தைத் தொடங்கியது.
- அத்தியாவசிய நிவாரணப் பொருட்களின் முதல் தொகுப்பு, ஐ.என்.எஸ். விக்ராந்த் (விமானந்தாங்கி கப்பல்) மற்றும் ஐ.என்.எஸ். உதய் கிரி (திறன்மிக்க போர்க் கப்பல்) மூலம் இலங்கைக்கு வழங்கப்பட்டன
- இந்த உதவி, இந்தியாவின் பின்வரும் கொள்கைகளால் வழிநடத்தப்படுவதாகப் பிரதமர் உறுதிப்படுத்தினார்:
- அண்டை நாடுகளுக்கு முதலிடம் கொள்கை.
- சாகர் (MAHASAGAR – Mutual And Holistic Advancement for Security and Growth Across Regions) தொலைநோக்கு பார்வை.
இந்திய கடற்படையின் சர்வதேச கடற்படைக் கூட்டம் 2026
- இந்திய கடற்படை, 2026 பிப்ரவரி மாதம் விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படைக் கூட்டத்தை (IFR – International Fleet Review) நடத்த உள்ளது.
- கருப்பொருள் : “கடல்கள் வழியே ஒற்றுமை” மற்றும் “நட்பின் பாலங்களை” வலுப்படுத்துதல்
- இந்த IFR நிகழ்வானது, இந்தியாவின் 75வது குடியரசு தினத்துடன் ஒத்துப்போகிறது.
- இந்தியா கடைசியாக 2001-ல் (மும்பையில்) ஒரு IFR-ஐ நடத்தியது, அதன் பிறகு சமீபத்தியது 2016-ல் (விசாகப்பட்டினத்தில்) நடந்தது. எனவே, 2026 நிகழ்வு இந்தியாவால் நடத்தப்படும் மூன்றாவது சர்வதேச கடற்படைக் கூட்டம் ஆகும்.
- இந்திய கடற்படை, SIMBEX, வருணா (Varuna), மற்றும் CORPAT போன்ற சுமார் 20 இருதரப்புப் பயிற்சிகளிலும் (bilateral exercises), மேலும் QUAD, MILAN, மலபார் மற்றும் கொங்கன் போன்ற பலதரப்பு ஈடுபாடுகளிலும் பங்கேற்கிறது.

