தோழி’ விடுதி திட்டம்
- உலக மகளிர் தின விழாவில் தமிழக முதல்வர் இதனை அறிவித்தார்.
- தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையானது, பணிபுரியும் பெண்களுக்காக ஒன்பது மாவட்டங்களில் பதினொரு தங்கும் விடுதிகளைத் தொடங்கியுள்ளது.
- இவ்வகை விடுதிகளுக்கு ‘தோழி’ (பெண் தோழர்) என்று பெயரிடப்பட்டுள்ளது.
- இவ்விடுதி தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதி கழகம் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் செயல்பட உள்ளது.
- பெண்களுக்குப் பாதுகாப்பான மற்றும் விலை மலிவானத் தங்குமிடங்களை வழங்கச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்
- இந்த திட்டத்தின் விடுதிகள் சென்னை, செங்கல்பட்டு, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
- தற்போது தமிழகத்தில் ரூ.62.51 கோடியில் புதிதாக 12 இடங்களில் தோழி விடுதிகள் கட்ட முதல்வர் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டியுள்ளார்.
- தமிழகத்தில் ஏற்கெனவே 19 தோழி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
- மேலும், 14 விடுதிகளுக்கான தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தோழி விடுதிகள், கூர்நோக்கு இல்லம் உள்ளிட்ட கட்டடங்கள் கட்டபட உள்ளன.
- மயிலாடுதுறை, விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி,ராமநாதபுரம், தூத்துக்குடி புதுக்கோட்டை, அரியலூர், திருவாரூர், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் 740 ஊழியர்கள் தங்கும் வகையில் இந்த விடுதிகள் கட்டப்படவுள்ளன.
- மேலும் கோவை மாவட்டத்தில் ‘பூஞ்சோலை’ எனும் பெயரில் அரசு மாதிரி கூர்நோக்கு கட்டடங்களும் அமைய உள்ளன.
பெண்களுக்கு புற்றுநோய் கண்டறிய நடமாடும் மருத்துவ ஊர்தி
- பெண்களின் வசிப்பிடங்களுக்கே சென்று புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை கண்டறியக்கூடிய நவீன வாகனத்தை முதல்வர் 13.11.25 அன்று தொடங்கி வைத்தார்
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த வாகனம் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
- இத்திட்டமானது மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ், மகளிர் நல்வாழ்வுக்காக ரூ.40 கோடியில் 38 நடமாடும் மருத்துவ ஊர்திகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
புராதனச் சின்ன ஆணையம் அமைப்பு
- பழமையான மற்றும் புராதன கோயில்கள் மற்றும் சின்னங்களைப் பாதுகாக்க புராதனச் சின்ன ஆணையம் அமைக்க வேண்டும் என்று தமிழக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- தமிழகத்தில் பழமையான மற்றும் புராதன கோயில்கள் மற்றும் சின்னங்களைப் பாதுகாக்க புராதன சின்னங்கள் ஆணையச் சட்டம் கடந்தாண்டு முதல் அமலுக்கு வந்தது.
தமிழ்நாடு பாரம்பரிய ஆணையம்
- நான்கு வாரங்களுக்குள் தமிழ்நாடு பாரம்பரிய ஆணையத்தை (TNHC) அமைக்க உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
- மத்திய அல்லது மாநில பழங்கால நினைவுச்சின்னச் சட்டங்களின் கீழ் வராத பழமையான கட்டிடங்கள் மற்றும் வளாகங்களைப் பாதுகாப்பதே TNHCயின் நோக்கம்.
- 2012 இல் இயற்றப்பட்ட TNHC சட்டம், ஆனால் 12 ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருந்தது.
- மார்ச் 12, 2024 அன்று அமலுக்கு வந்தது.
- சட்டம் அமலுக்கு வந்த பிறகும் ஆணையம் இன்னும் அமைக்கப்படவில்லை.
TNHCயின் அமைப்பு
- பாரம்பரியப் பாதுகாப்பில் அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு சிறந்த நபர் தலைமையில்அதிகபட்சம் 16 உறுப்பினர்கள், பதவி சார்ந்த உறுப்பினர்கள் உட்பட: சுற்றுலா செயலாளர், நகர்ப்புற மேம்பாட்டு செயலாளர், நகராட்சி நிர்வாக செயலாளர், ஊரக மேம்பாட்டு செயலாளர், சட்ட செயலாளர்.
புராதன சின்னங்கள் மற்றும் தொல்பொருட்கள் பாதுகாப்புச் சட்டம் – 1958
- இந்தச்சட்டம் இந்தியாவில் உள்ள புராதன கோயில்கள், சின்னங்கள், தொல்பொருட்கள், தொல்லியல் தளங்கள் போன்றவற்றை பாதுகாக்க, பராமரிக்க மற்றும் ஆய்வு செய்ய உருவாக்கப்பட்டது
தமிழகத்தில் இந்தச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் சில இடங்கள்:
- பல்லவர்களின் மாமல்லபுரம் சின்னங்கள்
- தஞ்சை பெரிய கோயில்
- திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில்
- காஞ்சிபுரம் கங்கைகொண்ட சோழபுரம்
- கீழடி தொல்பொருள் தளம் போன்றவைகளாகும்.
ஒரு ரூபாயில் எங்கும் பயணிக்கலாம்
- சென்னை ஒன்’ செயலியில் தலா ஒரு ரூபாய் கட்டணம் செலுத்தி, மெட்ரோ, மாநகர பஸ், ரயிலில் ஒரு முறை சலுகை பயணம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- அதன்படி, பிஎச்ஐஎம் எனப்படும் பீம் மற்றும் நேவி செயலியை பயன்படுத்தி யுபிஐ வாயிலாக பணம் செலுத்துவோர், சென்னை மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்துகளின் முதல் டிக்கெட்டை ஒரு ரூபாய் மட்டுமே செலுத்தி முதல் பயணம் செய்ய முடியும்.
சென்னை ஒன் – செயலி
- நாட்டிலேயே முதல்முறையாக அனைத்துப் பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட செயலி ஆகும்.
- சென்னையில் பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், சென்னை பெருநகரப் போக்குவரத்து ஆணையம் இதனை உருவாக்கியுள்ளது.
- இது செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி தமிழக முதல்வரால் தொடங்கிவைக்கபட்டது.
- இந்தச் செயலியைப் பயன்படுத்தி மாநகர் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில்களில் பயணம் செய்யலாம்
- இந்த செயலியை ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் பயன்படுத்த முடியும்.

