மாநில கல்விக் கொள்கையின்படி புதிய பாடத்திட்டம் குழு அமைப்பு
- தமிழகத்தில் மாநிலக் கல்விக் கொள்கையின்படி பள்ளிகளுக்கு புதிய பாடத்திட்டத்தை உருவாக்க கலைத்திட்ட வடிவமைப்புக் குழு, கலைத்திட்ட உயர்நிலைக் குழு என இரு குழுக்களை பள்ளிக் கல்வித்துறை நியமனம் செய்துள்ளது.
குழுக்களின் பணிகள்
- அரசாணையின்படி கலைத் திட்ட வடிவமைப்புக் குழுவானது கற்றல்-கற்பித்தல் நோக்கங்களுக்கும், கற்றல் அடைவுக்குமான இடை வெளியைக் கருத்தில் கொண்டு தற்போதைய கலைத்திட்டம், பாடத்திட்டம், கற்பித்தல் அணுகு முறை மற்றும் மதிப்பீட்டு முறைகள் ஆகியவற்றில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளும்
- அதற்காக ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் கல்விசார் கருத்துகளையும் பெற்று, தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025-இன் அடிப்படையில் தமிழ்நாடு பள்ளிக்கல்விக்கென புதிய கலைத்திட்ட வடிவமைப்புக்கான பரிந்துரைகள், வரைவுப் பாடத்திட்டம் ஆகியவற்றை உருவாக்கிய உயர்நிலைக் குழுவின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கும் .
கலைத்திட்ட வடிவமைப்புக் குழு:
உறுப்பினர்கள்
|
கலைத்திட்ட உயர்நிலைக்குழு:
உறுப்பினர்கள்
|
தமிழகத்தில் முதலீடு செய்ய கேமிங் நிறுவனங்களுக்கு அழைப்பு
- அனிமேஷன், விஷுவம் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் துறையின் வளர்ச்சிக்காக புதிய கொள்கை விரைவில் வெளியிடப்படும் என தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- கேம் டெவலப்பர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா சார்பில் 17-வது இந்திய கேம் டெவலப்பர்களுக்கான மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் 05.11.25 அன்று தொடங்கியது.
- தமிழகத்தில் முதல்முறையாக நடத்தப்படும் இந்த மாநாட்டை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
- புகழ்பெற்ற நிண்டெண்டோ நிறுவனம் முதல்முறையாக இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளது.

