அரிய வகை குள்ள நரிகள்
- கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுரபுன்னை காடுகளில் வனத்துறை அதிகாரிகள் ஏராளமான அரிய வகை குள்ள நரிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
- பிச்சாவரத்தில் உள்ள சதுப்புநிலக் காடுகள் 3,000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளன. இந்தக் காடுகளில் காயல் மற்றும் அடர்ந்த சதுப்புநில (சுரபுன்னை) காடுகள் அடங்கும்.
- இந்த சுரபுன்னை காடுகள் அதிக எண்ணிக்கையிலான நீர்நாய்கள் மற்றும் அரிய வகை குள்ள நரிகளின் தாயகமாகும்.
- அவை மீன், நண்டுகள் மற்றும் இறால்களை உண்கின்றன. வகை குள்ள நரிகள் காடுகளின் தூய்மையாளர்களாக கருதப்படுகின்றன.
அனைவருக்கும் ஸ்டார்ட்அப்’ மையம் -தொடக்கம்
- தமிழ்நாடு உலகளாவிய ஸ்டார்ட்அப் மாநாடு ஐஐடி மெட்ராஸில் நடைபெற்றது. இதை தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தொடங்கி வைத்தார்.
- புதிய யுக தொழில்முனைவோர் மற்றும் ஸ்டார்ட்அப்களுக்கு உதவும் நோக்கில் ஐஐடி மெட்ராஸ் ‘அனைவருக்கும் ஸ்டார்ட்அப்’ என்ற மையத்தைத் தொடங்கியுள்ளது.
- ஐஐடி மெட்ராஸின் புதிய யுக தொழில்முனைவோர் ஆராய்ச்சி மையம் மற்றும் பேரிடர் நிதி ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து ‘அனைவருக்கும் ஸ்டார்ட்அப்’ என்ற மையத்தைத் தொடங்கியுள்ளன.
ஐஐடி மெட்ராஸ் – 70வது இடம்
- ஆசியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஐஐடி மெட்ராஸ் 70வது இடத்தைப் பிடித்துள்ளது.
- இங்கிலாந்தின் லண்டனை தளமாகக் கொண்ட உலகளாவிய உயர்கல்வி பகுப்பாய்வு நிறுவனமான குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (கியூஎஸ்) வெளியிட்ட அறிக்கையில் இது கூறப்பட்டுள்ளது.
- ஐஐடி டெல்லி, ஐஐடி மெட்ராஸ், ஐஐடி மும்பை, ஐஐடி கான்பூர் மற்றும் ஐஐடி கரக்பூர் ஆகியவை ஆசியாவின் முதல் 100 கல்வி நிறுவனங்களில் அடங்கும்.
- இந்தப் பட்டியலில் உள்ள முதல் 100 கல்வி நிறுவனங்களில் 7 இந்திய கல்வி நிறுவனங்கள் உள்ளன. முதல் 200 கல்வி நிறுவனங்களில் 20 இந்திய கல்வி நிறுவனங்களும், முதல் 500 கல்வி நிறுவனங்களில் 66 கல்வி நிறுவனங்களும் உள்ளன.
- கியூஎஸ் தரவரிசைப்படி, ஆசியாவின் முதல் 100 கல்வி நிறுவனங்களில் ஹாங்காங் பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளது.
- இந்திய அளவில், ஐஐடி டெல்லி 50வது இடத்தையும், ஐஐடி மெட்ராஸ் 20வது இடத்தையும், ஐஐடி மும்பை 71வது இடத்தையும், ஐஐடி கான்பூர் மற்றும் ஐஐடி கரக்பூர் 77வது இடத்தையும் பகிர்ந்து கொள்கின்றன.

