ககன்யான் திட்டம்:
- விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பக்கூடிய இந்தியாவின் கனவுத் திட்டமான திட்டத்தை ககன்யான் 2027-க்குள் செயல்படுத்த இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது என்று அதன் தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார்.
- இதற்காக 80,000-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடைபெற்றுள்ளதாகவும் 3ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி சோதனை செய்ய உள்ளனர்.
- உலக அளவில் விண்வெளிக்கு ராக்கெட்டுகனை வணிகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதில் இந்தியா 2 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது.
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
- 1960களிலும் 1970களிலும் தனது சொந்தமான ஏவுகலங்களைத் தயாரிக்க இந்தியா உந்தப்பட்டது.
- இதன் விளைவாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்பெங்களூரில் தலைமைப் பணியகம் கொண்டு 1969 இல் உருவாக்கப்பட்டது.
- 1975 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள், ஆரியபட்டா இஸ்ரோவால் அமைக்கப்பட்டு சோவியத் ஒன்றியத்தால் விண்ணேற்றப்பட்டது.
- 1980இல் இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட ஏவுகலம் மூலமாக முதல் செயற்கைக்கோள், ரோகிணியை விண்ணேற்றியது. தொடர்ந்து செயற்கைக் கோள்களை முனையச் சுற்றுப்பாதைகளில் ஏவத்தக்க முனைய துணைக்கோள் ஏவுகலம் மற்றும் புவிநிலைச் சுற்றுப்பாதைகளில் ஏவத்தக்க ஜி. எஸ். எல். வி என்ற இரு ஏவுகலங்களை வடிவமைத்துக் காட்டியது.
- இதன் உச்சக்கட்டமாக 2008 ஆம் ஆண்டில் நிலவை நோக்கிய இந்தியாவின் முதல் பயணமாக சந்திரயான்-1 ஏவப்பட்டது.
- இதன் ஆய்வு மையங்கள் 5 இடங்களிலும் சோதனை மையங்கள் 2 இடங்களிலும் கட்டமைப்பு மற்றும் ஏவல் மையங்கள் 5இடங்களிலும் கட்டளை மையங்கள் 4 இடங்களிலும் மனிதவள மேம்பாடு அமைப்பு 2 இடங்களிலும் வணிகக்கிளை ஒரு இடத்திலும் நிறுவி செயல்பட்டு வருகிறது.

