தமிழகம் இடையே இத்தாலி ஒப்பந்தம் அமைப்பு
- இத்தாலியின் ஜெர்மனியில் நடைபெற்று வரும் பிராங்பர்ட் சர்வதேச புத்தகத் திருவிழாவில் குழந்தைகள் புத்தகக் காட்சி நிறுவனமான பொலோனியா இடையே இலக்கிய, கலாச்சார பரிமாற்றம் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- இதில், தமிழக அரசின் சார்பில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பி.சந்தரமோகன் உள்ளிட்ட 10 கொண்ட குழுவினர் பங்கேற்று சிறப்பு அரங்கு அமைத்துள்ளனர்.
- இதன்மூலம் தமிழின் சிறந்த நூல்கள் உலகெங்கும் உள்ளவாசகர்களுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டுடன் கூட்டாண்மை மேற்கொள்ள ஆஸ்திரேலிய அரசுக்கு விருப்பம்
- சென்னை நகரத்துடனும், தமிழ்நாட்டுடனும் கூட்டாண்மை அமைத்து, தண்ணீர் மேலாண்மைக்கான துறையில் தன் நிபுணத்துவத்தையும் புதுமையான தொழில்நுட்பங்களையும் வணிக மற்றும் நிறுவக அடிப்படையிலான ஒத்துழைப்புகளின் மூலம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறது என்று தென் ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழல் மற்றும் நீர் துறையின் தூதர் கார்லீன் மேவால்ட் தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு, குறிப்பாக சென்னை நகரத்துடன் தண்ணீர் மேலாண்மையின் சிக்கல்களைப் புரிந்துகொள்வதில் கிடைத்த நமது நிபுணத்துவத்தைப் பகிர விரும்புகிறோம்.
- குடிநீர் வினியோகத்தின் நலத்தை உறுதி செய்ய புதுமையான மற்றும் குறைந்த செலவிலான தண்ணீர் மேலாண்மைத் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதே எங்கள் நோக்கம்,” என்று கூறியுள்ளார்.

