விருதுகள் மற்றும் கௌரவங்கள்

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு

  • பொருளாதாரத்துக்கான நோபல் நினைவுப் பரிசு அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் பேராசிரியர்கள் மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பொருளாதாரத்தில் மேலும் முன்னேற்றம் ஏற்படுவதற்கு புதிய வழி முறைகளும் சிந்தனைகளும் எவ்வாறு ஊக்கமளிக்கும் என்பது குறித்து ஜோயல், பீட்டர், ஃபிலிப் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.
    • புதிய சிந்தனைகள், பொருள் கள், சேவைகள், நடைமுறைகளால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி குறித்து விளக்கியதற்காக அவர்சுளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது.

    IUCN வின் பாதுகாப்பு விருதுபிஷர் ஃபிரெண்ட் செயலி

    • இந்த செயலி அபூதாபியில் நடைபெற்ற IUCN உலக பாதுகாப்பு மாநாட்டில் Tech4Nature Award விருதைப் பெற்றதுள்ளது.
    • இந்த விருது, அழிவின் விளிம்பில் உள்ள ஆலிவ் ரிட்லி ஆமைகள் (Olive Ridley turtles) இனத்தைப் பாதுகாப்பதிலும், கடல்மூலமாக வாழும் மீனவர் சமூகங்களை ஆதரிப்பதிலும் ஆற்றிய பங்களிப்புக்காக வழங்கப்பட்டது.

    பிஷர் ஃபிரெண்ட்’ (Fisher Friend) மொபைல் செயலி

    • இந்த செயலியின் முக்கிய அம்சங்களில் ஒன்று “மீன்பிடி தடைப்பகுதி எச்சரிக்கை அமைப்பு (No-Fishing Zone Alert System)” ஆகும்.
    • இது புவியியல் இடம் (Geolocation) தொழில்நுட்பத்தின் மூலம், மீனவர்கள் அறிவிக்கப்பட்ட தடைப்பகுதி அருகில் சென்றுவிட்டால் உடனடியாக எச்சரிக்கை அனுப்புகிறது. இதுவரை இந்த எச்சரிக்கை 7,000 முறை வழங்கப்பட்டு, ஆயிரக்கணக்கான சட்ட மீறல்களைத் தடுப்பதாக மதிப்பிடப்படுகிறது.
    • முன்பு சட்டத்தால் வரையறுக்கப்பட்ட எல்லைகள் மீனவர்களுக்கு தெரியாதவையாக இருந்தன. ஆனால் இப்போது, இந்த செயலி அவற்றை நேரடியாகக் காட்டுகிறது. இதனால் ஆமைகள் பாதுகாக்கப்படுகின்றன; அதேசமயம் மீனவர்களும் தண்டனைகளில் சிக்காமல் இருக்கிறார்கள்
    • இந்த செயலி முதன்முதலில் 2004 இந்தியப் பெருங்கடல் சுனாமிக்குப் பிறகு, Qualcomm மற்றும் இந்திய தேசிய கடல் மையத்தின் (Indian National Centre) ஆதரவுடன் உருவாக்கப்பட்டது.
    • இது பாறைகள், மூழ்கிய கப்பல்கள், பவளப் பாறைகள் போன்ற கடல் அபாயங்களைக் குறித்தும் எச்சரிக்கைகளை வழங்குகிறது.
    • தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களில் உள்ள மீனவர்கள் தற்போது இந்த செயலியைப் பயன்படுத்தி கடல் ஆபத்துகளைத் தவிர்த்து பாதுகாப்பாக வழிநடத்துகின்றனர்.
Next Current Affairs விருதுகள் மற்றும் கௌரவங்கள் >