இலக்கியத்துக்கான நோபல் பரிசு
- கிராஸ்னஹோர்காய் (71) என்ற ஹங்கேரி எழுத்தாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- கடும் பயங்கரவாத சூழலுக்கு மத்தியிலும் கலையின் சக்தியை உறுதிப்படுத்தியதை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு இந்தப் பரிசு வழங்கப்படுவதாக ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள நோபல் தேர்வு கமிட்டிகளில் ஒன்றான இலக்கியத்துக்கான ராயல் ஸ்வீடன் அகாதெமி தெரிவித்துள்ளது.
- இவரது முதல் நாவலான ‘ஷாடான்டன்கோ’ 1985-இல் வெளியானது. இந்த நாவலும் எதிர்ப்பின் மனச்சோர்வு’ (தி மெலன்கலி ஆஃப் ரெசிஸ்டன்ஸ்) என்ற அவரது மற்றொரு நாவலும் ஆதிக்கத்துக்கு எதிரான தொடர் போராட்டங்களை விவரிக்கிறது.
- எழுத்தாளரான லாஸ்லோ கிராஸ்னஹோர்காய், 2015-இல் மேன் புக்கர் பரிசையும் பெற்றுள்ளார்.

