தேசிய நிகழ்வுகள்

உலகளாவிய தரவு மையம் இந்தியா

  • உலகளாவிய தரவு மையமாக உருவெடுக்கும் திறனுடன் இந்தியா விளங்குகிறது என்று இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.
  • உலகின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு சந்தையை இந்தியா கொண்டுள்ளது என்றும் தொலைத்தொடர்பு உபகரணங்களை சொந்தமாக தயாரிக்கும் திறன்கொண்ட உலகின் 5 நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது.
  • தொலைத்தொடர்பு துறையில் இந்தியா, ‘தற்சார்பு’ நிலையை அடைந்ததுள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரம்மபுத்திரா நதி

  • திபெத்தின் கைலாஷ் மலைத்தொடரில் உள்ள செமாயாங்க்-தோங் பனிமலை பகுதியில் இருந்து உதயமாகிறது.
  • திபெத்தில் இதன் பெயர் சாங்போ அல்லது சாங்க்போ என்று அழைக்கப்படுகிறது.
  • இந்தியாவில் அருணாசலப் பிரதேசம் வழியாக நுழைந்து சியாங் என்றுழைக்கப்படுகிறது.
  • அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா என அழைக்கப்படுகிறது.
  • நதியின் நீளம்: சுமார் 2900 கி.மீ.ஆகும்.
  • இணையும் நதிகள்: டிபாங், லோஹித், சுபன்சிரி போன்றவையாகும்.
  • வங்கதேசத்தில் ஜமுனா என அழைக்கப்பட்டு கங்கை  பட்மா உடன் இணைந்து மேக்னா வாகி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
Next Current Affairs தமிழ்நாடு நிகழ்வுகள் >