கடல் உணவுப் பொருள்களை தயாரிக்க புதிய தொழில்நுட்பம்
- தமிழ்நாடு அரசு தொழில் வழிக்காட்டி அமைப்பு, ஐரோப்பிய வரியற்ற வர்த்தக சங்கம், தென்னிந்திய தொழில் வர்த்தக சபை ஆகியவை இணைந்து சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே உள்ளிட்ட நாடுகளுடன் தொழில் மற்றும் வர்த்தக வாய்ப்புகள் குறித்த விவாதித்தனர்.
- இம்மாநாடு சென்னையில் நடைபெற்றது.
- கடலிலேயே மீன் பண்ணைகளை அமைத்து மீன் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் திட்டத்தை தமிழகத்தில் அறிமுகம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படவும் உள்ளன.
வருவாய்த் துறை தினம் ஜூலை – 1
- அறுவடை தொடக்கத்தைக் குறிக்கும் தினமான ஜூலை 1-ஆம் தேதியை ‘வருவாய்த் துறை தினமாக’ கொண்டாட தமிழக அரசு அறிவித்துள்ளது.
- வருவாய்த் துறையின் சிறப்பான பணியை அங்கீகரித்து இந்த அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக தெருக்கள், சாலைகளில் ஜாதிப் பெயர்களை நீக்க வேண்டி ஆணை வெளிடப்பட்டுள்ளது.
- இந்த உத்தரவை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது.
- குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் மற்றும் பிற பொது உள்கட்டமைப்புகளில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்குதல் அல்லது மறு பெயரிடுதல் தொடர்பான வழி காட்டு நெறிமுறை வெளியிட்டு உள்ளது.
- ஜாதிப் பெயர்களுக்கு மாற்றாக, குளம், நீர்நிலைகள், தெருக்கள். சாலைகள் ஆகியவற்றுக்கு தமிழக அரசே பெயர்களைப் பரிந்துரை செய்துள்ளது.
-
- குளம் மற்றும் நீர்நிலைகள் : குளம், நீர்நிலைகளுக்கு ரோஜா, மல்லி, செம்பருத்தி, சூரியகாந்தி, சாமந்தி, தாழம்பூ, காந்தள், கன காம்பரம், கொன்றை, மகிழம்பூ, முல்லை, செண்பகம், குவளை, குறிச்சி, செவ்வந்தி.
- தெருக்கள்-சாலைகள் : திருவள்ளுவர், ஒளவையார், கபிலர், சீத் தலைச் சாத்தனார், நக்கீரர், பிசிராந்தையார், கம்பர், அகத்தியர், வீர மாமுனிவர், பாரதியார், பாரதிதாசன், மகாத்மா காந்தி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, காமராஜர், கலைஞர் என்று பெயர்களை சூட்டலாம் என ஆலோசனை வழங்கியுள்ளது.
தமிழகத்தின் நான்காவது பல்லுயிர் பாரம்பரியத்தலம்
- ஈரோடு மாவட்டத்தில் உள்ள நாகமலை குன்றை தமிழகத்தின் 4-ஆவது பல்லுயிர் பாரம்பரியத் தலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
- இதனை தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- நாட்டிலேயே 20 ராம் சர்தலங்களை தமிழகம் தன்னகத்தே கொண்டு உள்ளது.
- அரிய, அச்சுறுத்தலுக்கு உள்ளான மற்றும் அழிந்துவரும் உயிரினங்களைப் பாதுகாக்கவும்.அவற்றின் இனப் பெருக்கத்தை அதிகரிக்கவும் ஏற்ற பகுதிகளாக பல்லுயிர் பாரம்பரியத் தலங்கள் உள்ளன.
- கடந்த ஆண்டு மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியும், நிகழாண்டில் திண்டுக்கல் மாவட்டம் காசம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்டம் எலத்தூர் ஏரி ஆகிய இடங்கள் பல்லுயிர் பாரம்பரியத் தலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
நாகமலை குன்று
- இது மொத்தம் 32.22.50 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ளது.
- இக்குன்று இடம்பெயரும் மற்றும் உள்ளூர் பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள், ஈரநிலச் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கான முக்கிய வாழ்விடமாக உள்ளது.
- நாகமலைகுன்றில் 138 தாவர இனங்கள், 118 பறவை இனங்கள் 7 பாலூட்டிகள், 11 ஊர்வனங்கள், 5 சிலந்திகள் 71 பூச்சியினங்கள் காணப்படுகின்றன.
- இதில் பெரிய புள்ளிகள் கொண்ட கழுகு, வெளிறிய பூனைப் பருந்து, பென்னெல்லிஸ் கழுகு போன்ற அரிய பறவை இனங்களும் உள்ளடங்கும்.
- இரும்பு காலத்தைச் சேர்ந்த கற்குவை வட்டங்கள், பாறை மறைவிடங்கள், பழங்கால கலைப்பொருள்கள் உள்ளிட்டவையும் இப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.
-
- இப்பகுதியில் தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்ட 400 ஆண்டுகள் பழைமையான ஆஞ்சனேயர் சுவாமி கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மருந்தகம்
- இத்திட்டம் 24-02-2024 அன்று தமிழக சுகாதாரத் துறை முலம் தொடங்கப்பட்ட திட்டமாகும்.
- தமிழகத்தில் மொத்தம் 1,000 மருந்தகங்கள் அமைக்கப்பட உள்ளது.
- இத்திட்டத்தின் கீழ் மருந்துகள் கொள்முதல் விலையைவிட 25% குறைவாகவும், தனியார் மருந்தகங்களில் கிடைக்கும் விலையைவிட அதிகபட்சம் 75% குறைவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.
ரயோத்வாரி பட்டா நிலம் குறித்து தீர்வு காண 7- பேர் கொண்ட உயர்மட்ட குழு
- ரயோத்வாரி (Ryotwari) நிலம் என்பது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பிரத்தியேகமாக தனிநபர்களுக்கு நேரடியாக அரசால் கொடுக்கப்பட்ட நிலங்களை குறிக்கும்.
- ரயோத்வாரி பட்டா நிலத்தைச் சார்ந்த பிரச்சினைகளை தீர்க்க தமிழக அரசு ஏழு உறுப்பினர்கள் கொண்ட உயர் மட்ட குழுவை அமைத்ததுள்ளது.
- இதன் தலைவர் தலைமைச் செயலாளர் ஆவார்.

