தொல்லியல் அறிஞர் நடன.காசிநாதன்
- இவர் தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநரும், வரலாற்று ஆய்வாளரும்ஆவார்.
- கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் தொப்பளிக்குப்பத்தில் பிறந்தவர்,
- 1967-இல் தமிழக அரசின் தொல்லியல் துறையில் கல்வெட்டு ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார்.
- 1981-இல் தமிழக தொல்லியல் துறையின் துணை இயக்குநராகவும் 1989-இல் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
- ‘தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனம்‘ என்ற அமைப்பைத் தொடங்கிக் கருத்தரங்குகளை நடத்தி வந்துள்ளார்.
- தமிழ் பிராமி கல்வெட்டுகள், தொல்லியல், வரலாறு, அகழாய்வு, நாணயவியல், செப்பேடுகள் எனப் பன்முக ஆய்வுகளை மேற்கொண்டு பல நூல்களை எழுதியுள்ளார்.
- தமிழக அரசின் உ.வே.சா. விருது உள்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
- தமிழகத்தில் முதன் முதலில் இவரது தலைமையில்தான் பூம்புகாரில் ஆழ்கடல் ஆய்வு நடத்தப்பட்டது.
- இவருடைய நூல்கள் மற்றும் இதழ்கள் உள்ளிட்ட 3,000-க்கும் மேற்பட்ட ஆவணங்களைச் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துக்கு அவர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

