நாட்டிலேயே முதல்முறையாக செல்லப்பிராணிகளுக்கு தனி இணையதளம்
- தெருநாய்கள் கண்காணிப்புக்கு மைக்ரோசிப், உரிமம் வழங்குதல், ரேபீஸ் தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மேலாண்மைக்கான புதிய இணையதளத்தை சென்னை மாநகராட்சி துவங்கிஉள்ளது.
- இதனை சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைத்தார்.
- (pet animal licence) chennaicorporation.gov.in இணையதளம் மூலம் உரிமம் பெறும் வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அன்னி பெசன்ட்
- பிறப்பு: 1847 அக்டோபர் 1, லண்டன், இங்கிலாந்து
- இறப்பு: 1933 செப்டம்பர் 20, அடையார், சென்னை (பழைய மதராஸ்), இந்தியா.
- 1874-இல் தேசிய மதச்சார்பற்ற சங்கத்தில் சேர்ந்தார்.
- 1874-88 வரை பல அரசியல் மற்றும் சுதந்திர சிந்தனைப் புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்களை எழுதினார்.
- அன்னி பெசன்ட் தியோசாபிக்கல் சொசைட்டியின் இரண்டாவது சர்வதேசத் தலைவரானார்
- இவருக்கு டாக்டர் ஆஃப் லெட்டர்ஸ் பட்டம் வழங்கப்பட்டது.
- பாலகங்காதர திலகருடன் இனைந்து 1916-ஆம் ஆண்டு இவர் நடத்திய ஹோம் ரூல்’ இயக்கம் நாடு முழுவதும் பரவியது.
- 1917-இல் மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
- 1914-இல் இந்திய இளைஞர்கள் சங்கத்தைத் அமைத்தார்.
உலக புத்தொழில் மாநாடு
- இம்மாநாடு கோவையில் நடைபெறுகிறது.
- 39 நாடுகளைச் சேர்ந்தவர்கள் தொழில்முனைவோர் பங்கேற்க உள்ளனர்.
- அக். 9, 10-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
முதல்வர் மு.க.ஸ் டாலின், மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார்.
- அதன் இலச்சினை, இணையதளத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.
முதுபெரும் இதழாளர் டி.ஜே.எஸ்.ஜார்ஜ்
- முதுபெரும் இதழாளர், கட்டுரையாளர், எக்ஸ்பிரஸ் பப் ளிகேஷன்ஸ் (மதுரை) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர். தி நியூ இந்தியன் எக்ளிபரஸ் ஆங்கில நாளேட்டின் ஆசிரியர் குழு ஆலோசகர் டி.ஜே.எஸ்.ஜார்ஜ் ஆவார்.
- 1950-ஆம் ஆண்டு மும்பையில் தி ஃப்ரீ பிரெஸ் ஜர்னல் இதழில் இதழியல் பயணத்தைத் தொடங்கினார்.
- தேசத் துரோக சட்டப் பிரியின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் இந்திய இதழின் ஆசிரியர் ஆவார்.
இதழியல் பணியில் புரிந்த சாதனைகளுக்காக
- 2011-மத்திய அரசின் பத்மபூஷண் விருது.
- 2007-இல் கர்நாடக அரசின், கர்நாகராஜ் யோத்ஸ்வா ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
தாயுமானவர் திட்டம்
- இது தமிழக அரசு 2024-ல் துவங்கிய திட்டமாகும்.
- பொதுவாக ஏழை குடும்பங்களை மேம்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டது. வீட்டு ரேஷன் விநியோகம், கல்வி உதவி, வேலைவாய்ப்பு, வீட்டு மற்றும் சமூக பாதுகாப்பு இதன் நோக்கமாகும்.
- முதியோர் (70+), மாற்றுத்திறனாளிகள், ஏழை, தனியார் குடும்பங்கள், அனாதைகள் போன்றவர்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டமாகும்.

