இலவச கட்டாயகல்வி திட்டத்தை செயல்படுத்த தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.4,144 கோடி வழங்கியுள்ளது.
கல்வி உரிமைச்சட்டம்
- 6–14 வயது குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி.
- பிரிவு 21A – இந்திய அரசியலமைப்பில் 2002ஆம் ஆண்டு 86வது திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது.
- குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ல் கொண்டு வரப்பட்டது.
- இது நடைமுறைக்கு வந்த தேதி: 1 ஏப்ரல் 2010.
முதல்வர் கோப்பை மாநிலப் போட்டிகள்
- முதல்வர் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது.
- சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்ரங்கில் நடைபெறுகிறது.
- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையால் நடத்தப்படுகிறது,
- மாநில அளவில் விளையாட்டு திறமைகளை வளர்ப்பது மற்றும் அடையாளம் காணுதல் இதன் நோக்கம் ஆகும்.
என்சிஆர்பி ஆய்வு அறிக்கை
முதியவர்களுக்கு எதிரான குற்றங்களில் தமிழகத்துக்கு 4-ஆவது இடம் பெற்றுள்ளது.
- அதிகளவு பொருளாதார குற்றங்கள் – ராஜஸ்தான் முதலிடம்
- அதிகளவு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் – உத்தரப்பிரதேசம் முதலிடம்
- அதிகளவு பட்டியலினத்தவருக்கு எதிரான குற்றங்கள்- உத்தரப்பிரதேசம் முதலிடம்
- அதிகளவு சிறார்களுக்கு எதிரான குற்றங்கள்- மத்தியப் பிரதேசம் முதலிடம்
- அதிகளவு முதியவர்களுக்கு எதிரான குற்றங்கள்- மத்தியப் பிரதேசம் முதலிடம்
- அதிகளவு இணையவழி குற்றங்கள்- கர்நாடகா முதலிடம்
- அதிகளவு பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள்- மணிப்பூர் முதலிடம்
NCRB [National Crime Records Bureau] [தேசிய குற்ற ஆவணக் காப்பகம்]
- நிறுவப்பட்ட ஆண்டு: 1986
- தலைமையகம்: புது டெல்லி
- நோக்கம் ; குற்ற தரவுகளை சேகரித்தல் மற்றும் பகுப்பாய்வு சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு தகவல் கொடுத்து உதவுவது ஆகும்.

