PM -ஸ்வநிதி
- கொரோனா பரவலின்போது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்ட தெருவோர கடைக்காரர்கள் நிலையை மேம்படுத்த கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி இந்த கடன் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.
- மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் மத்திய நிதிச் சேவைகள் துறை இணைந்து கூட்டாக இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன
- இந்த கடன் திட்டத்தின் காலம் 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது 2030-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலை:
- ‘PM ஸ்வநிதி மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், தெருவோர கடைக்காரர்களுக்கான முதல் தவணைக் கடன் வரம்பு ரூ. 10,000 என்ற அளவிலிருந்து ரூ.15,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- அதுபோல, இரண்டாம் தவணைக் கடன் ரூ.20,000-லிருந்து ரூ. 25,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மூன்றாம் தவணைக் கடன் முன்பிருந்தது போல ரூ. 50,000 என்ற அளவிலும் வழங்கப்படும்.
- இரண்டாவது கடனை உரிய காலத்தில் செலுத்தும் தெருவோர கடைக்காரர்கள். ஒருங்கிணைந்த பணப் பரிவரித்தனை (UPI) வசதியுடன் கூடிய ‘ரூபே’ கடன் அட்டையைப் பெறும் தகுதியைப் பெறுவர்.
- மேலும், சில்லறை மற்றும் மொத்த வியாபாரத்தில் எண்ம பணப் பரிவர்த்தனையை தேர்வு செய்யும் கடைக்காரர்களுக்கு ரூ. 1,600 வரை ஊக்கத் தொகையும் அளிக்கப்படும்.

