‘சுதர்சன சக்ரம்’ வான் பாதுகாப்பு அமைப்பு கேடயம்
- எந்த அச்சுறுத்தலில் இருந்தும் நாட்டைப் பாதுகாக்க அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சுதர்சன சக்ரம் திட்டம் நிறைவேற்றப்படும்.
சுதர்சன சக்ரம் பற்றி :
- பிரதமரின் சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்ட சுதர்சன சக்ரம் திட்டத்தின் கீழ், இந்தியாவின் புதிய வான்பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுவருகிறது.
- இந்த அமைப்பு நாட்டின் முக்கியமான மற்றும் தேசிய பாதுகாப்பு மையங்களைப் பாதுகாக்க உதவும். இது சென்சார்கள், ஏவுகணைகள், கண்காணிப்பு சாதனங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த கலவையாகும்.
- இதன்மூலம், எதிரிகளின் தாக்குதல்களை முறியடிப்பதுடன், துல்லியமான எதிர் தாக்குதல்களையும் மேற் கொள்ளமுடியும்.
- தேவை
- இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த அதிக அளவிலான ஒருங்கிணைப்பு அவசியம்.
- பல்வேறு துறைகளில் இருந்து வரும் தகவல்கள் நிகழ்நேரத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்டு, மிகவும் துல்லியமான பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படும்.
- தரை, வான், கடல் மற்றும் நீருக்கு அடியில் உள்ள அனைத்து பாதுகாப்புத் தளங்களின் தகவல்களும் ஒருங்கிணைக்கப்படும்.
- செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட கணினி தொழில்நுட்பம், தரவு பகுப்பாய்வு, மற்றும் குவாண்டம் தொழில்நுட்பம் போன்ற அதிநவீன தொழில் நுட்பங்கள் இத்திட்டத்தில் பயன்படுத்தப்படும்.
- 2035-ஆம் ஆண்டுக்குள் இந்தத் திட்டம் முழுமையாக நிறைவடையும்
பிரம்மோஸ் ஏவுகணை
- பிரம்மோஸ் ஒரு நீண்ட தூர சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை. இது முதன்முதலில் ஜூன் 12, 2001 அன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
- இந்த ஏவுகணை அமைப்பு இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்டது.
- இது இந்தியாவின் பிரம்மபுத்திரா நதி மற்றும் ரஷ்யாவின் மோஸ்க்வா நதியால் பெயரிடப்பட்டது.
INS உதயகிரி மற்றும் INS ஹிம்கிரி
- இந்திய கடற்படை விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளத்தில் அதிநவீன பிராஜெக்ட் 17ஏ பல்நோக்கு ரகசிய போர்க்கப்பல்களான உதயகிரி மற்றும் ஹிம்கிரியை அறிமுகப்படுத்தி உள்ளது.
INS உதயகிரி மற்றும் INS ஹிம்கிரி பற்றி
- மும்பையில் உள்ள மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட உதயகிரியும், கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் நிறுவனத்தால் கட்டப்பட்ட ஹிம்கிரியும், நாட்டின் வளர்ந்து வரும் கப்பல் கட்டும் திறமையையும், இந்தியாவின் முன்னணி பாதுகாப்பு கப்பல் கட்டும் தளங்களுக்கிடையேயான ஒற்றுமையையும் வெளிப்படுத்துகின்றன.
- இரண்டு போர்க்கப்பல்களும் இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டன.

