உலக மனிதாபிமான நாள் 2025
- தேதி: ஆகஸ்ட் 19 அன்று ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது.
- 2025 கருப்பொருள்: “உலகளாவிய ஒற்றுமையை வலுப்படுத்துதல் மற்றும் உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துதல்”
- உலக மூத்த குடிமக்கள் நாள் 2025
- உலக மூத்த குடிமக்கள் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 21 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
- 2025 கருப்பொருள்: “உள்ளடக்கிய எதிர்காலத்திற்கான முதியவர்களின் குரல்களை மேம்படுத்துதல்”
Aug – 20 – மாவீரன் ஒண்டிவீரன் நினைவு தினம்
- தென் தமிழகத்தில் பாளையக்காரர்களாக இருந்து பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடி தன் உயிரை இழந்த மாவீரர்களின் வரிசையில் மாவீரன் ஒண்டிவீரன் மகத்தானவன்.
- பாளையங்கோட்டை சமஸ்தானத்தின் புலித்தேவன் படைத்தளபதியாக இருந்து தன் மன்னனுக்கும் பாதுகாவலனாக தன் மண்ணையும் மக்களையும் காக்கும் காவல் தெய்வமாக அந்நியரை எதிர்த்துப் போராடியவர் மாவீரன் ஒண்டிவீரன்.

