தேசிய விளையாட்டு நிர்வாக சட்ட மசோதா
- பிசிசிஐ உள்பட நாட்டிலுள்ள விளையாட்டுச் சங்கங்கள், சம்மேளனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க தேசிய வினையாட்டு வாரியம் அமைத்தல் விளையாட்டுத் துறை சார்ந்த சச்சரவுகளுக்கு தீர்வு காண தேசிய விளையாட்டு தீர்ப்பாயம் அமைத்தல் போன்ற முக்கிய அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
- அங்கீகாரம் பெற்ற அனைத்து தேசிய விளையாட்டு அமைப்புகளும், தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பின் கீழ் வரவும் இந்த மசோதா வகை செய்கிறது.
- இந்த மசோதா விளக்க உரையில் சர்வதேச போட்டிகளில் இந்தியர்களின் பங்களிப்பை மேம்படுத்துவற்கு விளையாட்டுத் துறை நிர்வாகத்தில் ஆக்கபூர்வ மாற்றங்களைக் கொண்டுவருவது அவசியாமாகும். 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெறுவதற்கான தயார்நிலை நடவடிக்கைகளில் இதுவும் ஒரு பகுதியாகும் .
தேசிய விளையாட்டு வாரியம்
- விளையாட்டுகளுக்கான தேசிய சங்கங்கள், சம்மேளனங்கள் முறையாக இயங்குவதற்கான விதிகளை வகுப்பதற்கும். அவற்றின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கும் இந்த வாரியம் அதிகாரங்களைக் கொண்டிருக்கும்
- மத்திய அரசின் நிதியுதவியைப் பெற, நாட்டிலுள்ள அனைத்து சம்மேளனங்களும் இந்த வாரியத்திடம் அங்கீகாரம் பெறுவது கட்டாயம்.
தேசிய விளையாட்டு தீர்ப்பாயம்
- இந்த தீர்ப்பாயம் ஒரு சிவில் நீதிமன்றத்தின் அதிகாரங்களைக் கொண்டிருக்கும். அதன் முடிவுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும்.

